தமிழ்நாடு CM விஜய் வச்சிருக்க இந்தக் காரை தான் இப்போ எல்லாரும் வாங்க நினைக்கிறாங்க.. எந்த கார்னு தெரியுமா?
இந்தியாவில் டொயோட்டா நிறைய எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது. 10 லட்சம் ரூபாய் விலையில் தொடங்கி 1.3 கோடி ரூபாய் வரையிலான விலையில் எம்பிவிக்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இந்த இடத்தில் டொயோட்டாவை எம்பிவி ஸ்பெஷலிஸ்ட் என்று சொன்னால் கூடத் தகும். டொயோட்டாவின் அனைத்தும் எம்பிவிக்களைப் பற்றியும் அதிகம் பேசியிருப்போம், இந்த ஒரு எம்பிவியைத் தவிர.
இந்தியா பட்ஜெட் சந்தை என்பதால் இந்த எம்பிவியைப் பற்றி அதிக நாம் பேசியிருக்க மாட்டோம். அது வேறெதுவும் இல்லை, டொயோட்டாவின் வெல்ஃபயர் (Toyota Vellfire) எம்பிவி தான். மிகவும் சொகுசாக ஆறு பேர் வரை பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பும் பணக்காரக் குடும்பங்களின் பயன்பாட்டை மனதில் வைத்து இந்த எம்பிவி காரை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது.

இந்த வெல்ஃபயர் எம்பிவியும் தற்போது விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்தியாவில் இந்த சொகுசு எம்பிவி கார் அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இந்த ஆறு ஆண்டுகளில் மொத்தமாக 5,000 யூனிட்டுகள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது டொயோட்டா வெல்ஃபயர். இந்தியாவில் இப்போது 1.2 கோடி முதல் 1.3 கோடி ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த எம்பிவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வளவு விலை கொண்ட காருக்கு 5,000 யூனிட்டுகள் என்பது சிறப்பான ஒரு எண்ணிக்கை தான். 2020ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் இதன் விற்பனைய குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கிறது. 2024ம் நிதியாண்டில் மொத்தமாக 400 வெல்ஃபயர் கார்களையே இந்தியாவில் விற்பனை செய்திருந்தது டொயோட்டா. ஆனால் 2025ம் நிதியாண்டில் இந்த அளவு 189 சதவீதம் உயர்ந்து 1,155 யூனிட்டுகளை எட்டியது.

கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த 2026ம் நிதியாண்டில் இந்த அளவு மேலும் 56 சதவீதம் உயர்ந்து 1,483 யூனிட்டுகளாக உயர்ந்தது. நடப்பு 2027ம் நிதியண்டில் இந்த சொகுசு எம்பிவி காரின் விற்பனை இன்னும் உயரும் என்றே தெரிகிறது. ஏனெனின் இந்த நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில் மட்டும் சுமார் 118 வெல்ஃபயர் எம்பிவி கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 480 சதவீதம் விற்பனை உயர்வாகும்.
மாஸ் மார்க்கெட் கார்கள் மற்றும் பைக்குகளின் விற்பனை உயர்வது, சொகுசு கார்களின் விற்பனையிலும் எதிரொலித்து வருகிறது. முன்பை விட இப்போது சொகுசு கார்களையும் நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை வெல்ஃபயரின் விற்பனை மூலமாகவே நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. வெல்ஃபயர் தான் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எம்பிவியா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வெல்ஃபயருக்கு மேலாக அதன் தம்பி ஒருவன் இருக்கிறான். ஆம், டொயோட்டாவின் துணை நிறுவனமான லெக்சஸ் விற்பனை செய்து வரும் LM 350h என்ற எம்பிவி தான் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எம்பிவி காராக தற்போது இருக்கிறது. வெல்ஃபயர் உருவாக்கப்பட்ட அதே பிளாக்ஃபார்மே LM 350h எம்பிவி காருக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வெல்ஃபயரை விட இன்னும் ப்ரீமியமாக, இன்னும் அதிக சொகுசு வசதிகளுடன் LM 350h உருவாக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் வெல்ஃபயரை விட இரண்டு மடங்கு அதிகமாக 2.20 கோடி ரூபாய் முதல் 2.75 கோடி ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த லெக்சஸ் LM 350h உயர்தர சொகுசு எம்பிவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரபலங்கள் அதிகம் விரும்பி வாங்கக்கூடிய ஒரு காராக இந்த LM 350h மாறியிருக்கிறது. தமிழக முதலமைச்சரான விஜய்யின் கேரேஜில் கூட LM 350h கார் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் பயணம் செய்யும் வாகனங்கள் தான் என்றாலும், முடிந்த அளவிற்கு சொகுசான பயணத்தைக் கொடுக்கும் காரை வாங்கவே பட்ஜெட் கார் வாடிக்கையாளர்கள் முதல் சொகுசு கார் வாடிக்கையாளர்கள் வரை விரும்புகிறார்கள். அதனையே டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்சஸ் LM 350h போன்ற வாகனங்களின் விற்பனை உயர்வு சுட்டிக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications