இப்போ இந்த 7 சீட்டர் காருக்குத் தான் டிமாண்டு உச்சத்துல இருக்கு.. வாங்குறதுக்கு வரிசையில தான் நிக்கனும்!

இப்போது விஐபிக்கள் இடையே மிகவும் பிரபலமான கார் என்றால் அது சொகுசு எம்பிவிக்கள் தான். இந்தியாவில் தற்போது அதுபோல இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையில் இருக்கின்றன. ஒன்று லெக்சஸ் LM350h, மற்றொன்று டொயோட்டாவின் வெல்ஃபயர் (Toyota Vellfire). இதில் இரண்டாவது கார் மாடல் இப்போது விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது.

ஆம், முன்னை விட அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வெல்ஃபயர் எம்பிவியை விரும்பி வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக திரை நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என இந்தியாவில் உள்ள பல்வேறு விஐபி-க்கும், பிரபலங்களும் சொகுசு எம்பிவிக்களை வாங்கத் தொடங்கியதையடுத்து, இவற்றின் விற்பனை தற்போது பலமடங்கு அதிகரித்திருக்கிறது.

ToyotaVellfire

இதனை வெல்ஃபயரின் விற்பனை அளவைப் பார்த்தாலே நாம் தெரிந்து கொள்ள முடியும். கடந்த மே மாதம் 164 வெல்ஃபயர் கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது டொயோட்டா. இது 2025ம் ஆண்டு மே மாதத்தை விட 465 சதவீதம் அதிகமாகும். 2025 மே மாதம் வெறும் 29 வெல்ஃபயர் கார்களையே டொயோட்டா விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது மிகவும் குறைவான விற்பனை அளவாகத் தெரியலாம். ஆனால் வெல்ஃபயரின் விலையைக் கேட்டால் அப்படி சொல்ல மாட்டீர்கள். இந்தியாவில் இந்த சொகுசு எம்பிவி காரை 1.19 கோடி ரூபாய் முதல் 1.29 கோடி ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா.

Toyota Vellfire

ஹை மற்றும் விஐபி எக்ஸிக்யூட்டிவ் லாஞ் என இரண்டு வேரியன்ட்களாக மட்டுமே இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஹை வேரியன்டானது மேலே குறிப்பிட்டிருக்கும் குறைந்தபட்ச விலையையும், விஐபி எக்ஸிக்யூட்டிவ் லாஞ் வேரியன்டானது அதிகபட்ச விலையையும் கொண்டுள்ளது. இரண்டாவது வேரியன்டையே பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புகிறார்கள்.

இந்தாண்டு ஜனவரி மாதம் தான் இந்த வெல்ஃபயர் காரின் விற்பனை 4000 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆம், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 வெல்ஃபயர் கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்த நிலையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 123 யூனிட்டுகளாக அது உயர்ந்திருந்தது.

2020ம் ஆண்டில் இருந்து இந்த சொகுசு எம்பிவி காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. ஆனால் 2025ம் நிதியாண்டில் தான் முதல் முறையாக 1,000 யூனிட்டுகள் என்ற விற்பனை அளவை இந்தக் கார் எட்டியது. கடந்த 2026ம் நிதியாண்டில் 1,483 யூனிட்டுகளை எட்டிய நிலையில், நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக 2,000 யூனிட்டுகள் என்ற விற்பனை அளவை இந்த சொகுசு எம்பிவி எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எம்பிவியில் 2,487 சிசி, 4 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது டொயோட்டா. இந்த இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டாருடன் கூடிய ஹைபிரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. e-CVT கியர்பாக்ஸ் தேர்வைக் கொண்டிருக்கும் இந்த பவர்ட்ரெயினானது ஒட்டுமொத்தமாக 250 hp பவர் மற்றும் 240 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. காரின் உள்ளே சகல விதமான ப்ரீமியமான வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரதம் என்று சொல்வார்களே, அந்தப் பெயர் இந்தக் காருக்கத் தான் பொருந்தும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தது போல முன்பை விட தற்போது இந்த சொகுசு எம்பிவி காருக்கு மவுசு உயர்ந்து வருகிறது. படுக்கையறை சொகுசுடன் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கான காராக இந்த டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி இருக்கும். இதனை விட இருமடங்கு விலை கொண்ட லெக்சல் LM 350h எம்பிவியானது இதற்கும் ஒருபடி மேலே சென்று குட்டி படுக்கையறையையே காருக்குள் வைத்திருக்கும். லெக்சஸ் டொயோட்டாவின் துணை நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, June 23, 2026, 7:30 [IST]
English summary
Toyota vellfire luxury mpv sales on all time high why is it in demand
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out