டொயோட்டா வெல்ஃபையர் காரின் விற்பனை சரிவு... அப்படி இருந்தும் இத்தன பேர் வாங்கீட்டாங்களா!
இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் காரை இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வசம் சொந்தமாக வைத்துள்ளனர்.
தென் இந்திய திரையுலகை பொறுத்தவரையில் மோகன்லால், மம்முட்டி, ஃபஹத் பாசில், சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜூன் போன்ற நட்சத்திரங்கள் எல்லாம் டொயோட்டா வெல்ஃபையர் காரை வைத்துள்ளனர். அத்துடன் பாலிவுட் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரிடமும் டொயோட்டா வெல்ஃபையர் கார் உள்ளது.

பாலிவுட் திரையுலகை பொறுத்தவரையில் அபிஷேக் பச்சன், அமீர் கான், அக்ஸய் குமார், அஜய் தேவ்கன், அனில் கபூர், ஜான்வி கபூர், அலியா பட், கீர்த்தி சனோன் மற்றும் கியாரா அத்வானி போன்ற நட்சத்திரங்களிடம் எல்லாம் டொயோட்டா வெல்ஃபையர் கார் உள்ளது. இதுதவிர வளர்ந்து வரும் தொழில் அதிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் டொயோட்டா வெல்ஃபையர் காரை வைத்துள்ளனர்.
டொயோட்டா வெல்ஃபையர் கார் மிகவும் விலை உயர்ந்தது. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.20 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.30 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இவ்வளவு விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட இந்திய சந்தையில் பெரும்பாலான மாதங்களில் 3 இலக்க விற்பனை எண்ணிக்கையை டொயோட்டா வெல்ஃபையர் எட்டி விடும். இதன்படி நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் டொயோட்டா வெல்ஃபையர் கார் 3 இலக்க விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. ஆனால் விற்பனையில் சற்றே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் 140 டொயோட்டா வெல்ஃபையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 10.3 சதவீதம் குறைவு ஆகும். அதே நேரத்தில் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 14.63 சதவீதம் குறைவு ஆகும்.
இருப்பினும் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், வரும் மாதங்களில் டொயோட்டா வெல்ஃபையர் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என நம்பலாம். ட்யூயல் சன்ரூஃப், பிரீமியம் ட்யூயல் டோன் டேஷ்போர்டு, டிஆர்எல் உடன் 3 லென்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், ட்யூயல் டோன் மெஷின் கட் 19 இன்ச் அலாய் வீல்கள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் டொயோட்டா வெல்ஃபையர் காரின் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன.
அத்துடன் 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 15 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளையும் டொயோட்டா வெல்ஃபையர் கொண்டுள்ளது. இவை தவிர 6 ஏர்பேக்குகள், லேன் ட்ரேஸ் அஸிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளும் டொயோட்டா வெல்ஃபையர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில் 2.5 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனை டொயோட்டா வெல்ஃபையர் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 193 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த காரின் முன் மற்றும் பின் பகுதிகளில் ட்யூயல் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் சொகுசான பயண அனுபவத்தை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா வெல்ஃபையர் மிகவும் ஏற்றதாக இருக்கும். விலை அதிகம் என்றாலும் கூட, அதற்கு ஏற்ற வகையில் சொகுசான பயண அனுபவத்தை டொயோட்டா வெல்ஃபையர் கார் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications