ஸ்விஃப்ட்லாம் எலெக்ஸனுக்கு முன்னாடி! விஜய் வந்த காரின் விலை இத்தன கோடியா! ஆளுநர் மாளிகையே ஸ்டண் ஆயிருக்கும்!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (Tamil Nadu Election Results) வெளியாகி, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதுதான் இந்த ஆச்சரியத்திற்கு காரணம்.

நடிகர் விஜய்யால் (Vijay) கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தவெக (TVK), திமுக (DMK) மற்றும் அதிமுக (ADMK) ஆகிய 2 திராவிட கட்சிகளையும் வீழ்த்தி, அரியணை ஏறவுள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட, காங்கிரஸ் (Congress) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், தவெக ஆட்சியமைக்க உள்ளது.

Vijay

தவெகவிற்கு காங்கிரஸ் இன்று ஆதரவு அளித்தது. இதன் பின் உடனடியாக தமிழக ஆளுநர் அர்லேகரை (Governor Arlekar) விஜய் சந்தித்தார். அப்போது ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சராக (Chief Minister) விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஆளுநரை சந்திக்க மிகவும் விலை உயர்ந்த காரில் விஜய் வந்தார். அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மிரர் நவ் யூடியூப் (YouTube) சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மிகவும் விலை உயர்ந்த காரில், ஆளுநர் மாளிகைக்கு விஜய் வந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

BMW i7

இது பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) கார் ஆகும். TN 14 AH 0277 என்ற பதிவு எண்ணை கொண்ட இந்த கார், விஜய்யின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் தனது வேட்புமனுவிலேயே இந்த கார் பற்றிய விபரங்களை தெரிவித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த காரின் மதிப்பு 2,00,64,296 ரூபாய் என விஜய் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த காரின் பதிவு எண்ணை வைத்து பாலிசி பஜார் தளத்தில் தேடியதில் மேலும் ஒரு சில தகவல்கள் நமக்கு தெரிய வந்துள்ளன. இது பிஎம்டபிள்யூ ஐ7 காரின் எக்ஸ்டிரைவ்60 (xDrive60) வேரியண்ட் ஆகும். இதில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த காரின் பின் இருக்கை பயணிகளுக்காக 31.3 இன்ச் 8K சினிமா ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இது காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் சமயங்களில் இறக்கி வைத்து கொள்ளலாம். பின்னர் மடித்து வைத்து கொள்ள முடியும். மேலும் இந்த காரின் பின் பக்க கதவுகளில், 5.5 இன்ச் டச்ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை இயக்க முடியும். செயல்திறனை பொறுத்தவரையில் இந்த வேரியண்ட்டில் 101.7 kWh லித்தியம் அயான் பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் அதிகபட்சமாக 625 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது.

இது மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான தரவுகளின்படி, தற்போது இந்த வேரியண்ட் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதற்கு பதிலாக இடிரைவ்50 (eDrive50) என்ற வேரியண்ட்டை பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது.

இருப்பினும் எக்ஸ்டிரைவ்60 வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ள அதே 101.7 kWh பேட்டரிதான் இடிரைவ்50 வேரியண்ட்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த 2 வேரியண்ட்களின் பவர் அவுட்புட் வெவ்வேறாக உள்ளது. எக்ஸ்டிரைவ்60 வேரியண்ட்டின் பவர் அவுட்புட் 544 ஹெச்பி மற்றும் 745 என்எம் ஆகும். ஆனால் இடிரைவ்50 வேரியண்ட்டின் பவர் அவுட்புட் 449 ஹெச்பி மற்றும் 650 என்எம் ஆக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விஜய் பயன்படுத்தி வரும் பிஎம்டபிள்யூ ஐ7, இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். விஜய் மட்டுமல்லாது, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் (Ajay Devgn) போன்றவர்களிடமும் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் கார் உள்ளது.

முன்னதாக தேர்தலுக்கு முன்பு மிகவும் விலை குறைவான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரை விஜய் பயன்படுத்தி வந்தார். பல இடங்களுக்கு மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் விஜய் வந்து சென்றதை நாம் பார்த்துள்ளோம். இந்த சூழலில் தற்போது ஆளுநரை சந்திக்க அவர் பிஎம்டபிள்யூ ஐ7 சொகுசு எலெக்ட்ரிக் காரில் வந்து சென்றுள்ளார்.

Article Published On: Wednesday, May 6, 2026, 21:12 [IST]
English summary
Tvk chief vijay arrived at chennai lok bhavan in a bmw i7 viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+