காவலர் மீது மோதிய ஆதவ் ஆர்ஜூனா கார் பற்றிய அதிர்ச்சி தகவல்! தோண்ட தோண்ட வெளிவரும் உண்மைகள்!
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில், தவெக என சுருக்கமாக குறிப்பிடப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK - Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் (Vijay) மொத்தம் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
அவை பெரம்பூர் (Perambur) மற்றும் திருச்சி கிழக்கு (Trichy East) ஆகியவை ஆகும். இதில், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் (Nomination) செய்து விட்டார். இதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் இன்று (ஏப்ரல் 2) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அத்துடன் ரோடு ஷோ (Road Show) நடத்திய அவர், பிரச்சாரமும் மேற்கொண்டார். அப்போது தவெக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) பயணம் செய்த கார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சதீஷ் என்ற காவலர் மீது மோதியது. இதன் காரணமாக காவலர் சதீசுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சன் நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ஆதவ் ஆர்ஜூனா பயணம் செய்த காரின் நம்பர் TN 07 DT 5050 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பாலிசி பஜார் தளத்தில் நாங்கள் தகவல்களை தேடினோம்.

அப்போது அது டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் என்பது தெரிய வந்தது. அது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் லீடர் எடிசன் (Leader Edition) ஆகும். இந்த காரில், 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதிதான் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது புத்தம் புதிய கார் ஆகும். ஆதவ் அர்ஜூனாவால் தொடங்கப்பட்ட (Founder) வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் பெயரில் அந்த கார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை தேடியதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக அந்த காருக்கு 2 முறை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் நமக்கு தெரிய வந்தது. ஆனால் அது என்ன போக்குவரத்து விதிமுறை மீறல்? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் 2 முறையும் தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த 2 அபராத தொகைகளுமே இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த காருக்கு அபராதம் விதிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டன. ஒரு அபராதம் 2025ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கார் பதிவு செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே, அது போக்குவரத்து விதிமுறையை மீறியுள்ளது. அதை தொடர்ந்து 2வது அபராதம் 2025ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 அபராதங்களுமே இன்னும் செலுத்தப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆதவ் ஆர்ஜூனாவின் கார் விபத்து எப்படி நிகழ்ந்தது? என்பது சரியாக தெரியவில்லை. அதாவது சம்பவ இடத்தில் துல்லியமாக என்ன நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் வாகனங்களை இயக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த விபத்து நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








