இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் 7 சீட்டர் எஸ்யூவி கார்கள் இவை தான்

7 சீட்டர் கார் என்று வரும் போது எஸ்யூவி வாங்குவதா அல்லது எம்பிவி வாங்குவதா என்ற குழப்பம் எழும். மூன்று வரிசையாக 6 சீட்களுக்கு மேலான லேஅவுட்டுடனே எம்பிவி கார்கள் வடிவமைக்கப்படும். ஆனால் எஸ்யூவிக்கள் அப்படி இல்லை. 5 சீட்டராகவும் இருக்கும் மூன்று வரிசையாக 6/7 சீட்டராகவும் இருக்கும்.

எம்பிவிக்கள் நல்ல இடவசதி கொண்ட கார்களாக, நிறைய நபர்கள் செல்லக்கூடிய கார்களாக, தினசரிப் பயன்பாட்டிற்கு ஏற்ற கார்களாகப் பார்க்கப்படும். எனினும் எம்பிவிக்கள் ஒரு பல நேரங்களில் கார் போன்ற உணர்வாக இல்லாமல், மினி வேன் போன்ற உணர்வையே கொடுக்கும். இதனாலேயே பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் 7 சீட்கள் கொண்ட எஸ்யூவிக்கள் பக்கம் கவனத்தைத் திருப்புகிறார்கள்.

MG Majestor

எம்பிவிக்களை விட 7 சீட்டர் எஸ்யூவிக்களின் உட்புற இடவசதி கொஞ்சம் கம்மியாகத் தான் இருக்கும். ஆனால், நிறைய கிரௌண்டு கிளியரன்ஸ், ரக்கடான டிசைன் மற்றும் மேம்பட்ட அம்சங்களை எஸ்யூவிக்களே கொண்டிருக்கும். மேலும், தேர்ந்தெடுப்பதற்கும் நிறைய தேர்வுகள் எஸ்யூவி பிரிவில் சற்று அதிகமாக உள்ளன. இவற்றுடன் புதிதாகவும் பல்வேறு 7 சீட்டர் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ளன. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

டாடா சஃபாரி EV

டாடாவின் சஃபாரி எரிபொருள் வடிவில் 7 சீட்டர் எஸ்யூவி காராக ஏற்கனவே விற்பனையில் உள்ளது. அதன் EV வடிவத்தை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது டாடா மோட்டார்ஸ். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஒரேயொரு 3 வரிசை சீட்கள் கொண்ட எஸ்யூவி என்றால் அது மஹிந்திராவின் XEV 9S தான். கடந்தாண்டு இறுதியில் இந்த எலெக்ட்ரிக் 7 சீட்டர் எஸ்யூவி மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்தது அந்நிறுவனம்.

Tata Safari

அந்த மஹிந்திரா எலெக்ட்ரிக் காருக்குப் போட்டியாகவே புதிய சஃபாரி EV காரை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ். கடந்தாண்டு அந்நிறுவனம் வெளியிட்ட ஹேரியர் EV-யின் பவர்ட்ரெயின், அம்சங்கள் மற்றும் எரிபொருள் சஃபாரி எஸ்யூவியின் டிசைன் மற்றும் வடிவமைப்பை புதிய சஃபாரி EV கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேரியர் EV காரில் கொடுக்கப்பட்டிருக்கும் 75 kWh பேட்டரி பேக் மற்றும் குவாடு வீல் டிரைவ் (QWD) வசதி ஆகியவை சஃபாரி EV மாடலிலும் குறிப்பிடத்தக்க வசதிகளாக இருக்கும். டாடாவின் எலெக்ட்ரிக் வாகன லைன்-அப்பில் தற்போது விற்பனையில் இருக்கும் ஹேரியர் EV மற்றும் அடுத்து வெளியாகவிருக்கும் சியரா EV-க்கு மேலாக இந்த சஃபாரி EV பிளேஸ் செய்யப்படும்.

எம்ஜி மெஜஸ்டர்

டொயோட்டா ஃபார்ச்சூனருக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியாகவிருக்கும் எம்ஜியின் 7 சீட்டர் எஸ்யூவி மெஜஸ்டர். இந்தக் காரை சில மாதங்களுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட்டது எம்ஜி மோட்டார். தற்போது வெளியீட்டிற்காக மட்டுமே காத்திருக்கிறது. இந்தியாவில் எம்ஜி விற்பனை செய்து வரும் கிளாஸ்டர் எஸ்யூவிக்கு மாற்றாக இந்த மெஜஸ்டர் களமிறங்குகிறது.

3 டிஃபரன்ஷியல் லாக்குகள், 10 ஆஃப்-ரோடு மோடுகள், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS, ஹீட்டிங், வென்டிலேஷன் மற்றும் மஸாஜிங் வசதிகள் கொண்ட முன்பக்க சீட்கள் ஆகிய மேம்பட்ட அம்சங்களை இந்த ப்ரீமியம் ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலில் எம்ஜி மோட்டார் கொடுத்திருக்கிறது. கிளாஸ்டரில் பயன்படுத்தப்பட்ட 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜினே (213 hp பவர்) புதிய மெஜஸ்டரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கியா சோரென்டோ

டொயோட்டா ஃபார்ச்சூனருக்குப் போட்டியாக தயாராகி வரும் மற்றொரு 7 சீட்டர் எஸ்யூவி கார். இது கியா நிறுவனத்திடமிருந்து. வெளிநாடுகளில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் சோரென்டோ எஸ்யூவி மாடலை இந்தியாவிலும் களமிறக்கவிருக்கிறது. எரிபொருள் பிரிவில் இந்தியாவில் கியாவின் பெரிய எஸ்யூவி என்றால் அது செல்டோஸ் தான்.

ஆனால் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, எம்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் அதற்கும் மேலான அளவில் ப்ரீமியமான எஸ்யூவிக்களையும் விற்பனை செய்து வருகின்றன. எனவே அவற்றுக்கெல்லாம் போட்டியாக 4.8 மீட்டர் அளவுடைய சோரென்டோவை இந்தியாவில் களமிறக்க கியா திட்டமிட்டுள்ளது. இதனை ஏற்கனவே இந்தியாவில் சோதனை செய்யவும் தொடங்கிவிட்டது இந்த தென் கொரிய நிறுவனம்.

இதனை முழுமையான எரிபொருள் வடிவில் மட்டுமின்றி ஹைபிரிட் வடிவிலும் வெளியிட கியா திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெளிநாடுகளில் இந்தக் காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைபிரிட் செட்டப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் எந்த பவர்ட்ரெயினைக் கொடுக்கவுள்ளது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்கோடா கோடியாக் RS

தற்போது இரண்டாம் தலைமுறை ஸ்டாண்டர்டு கோடியாக் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஸ்கோடா. இத்துடன் அதன் ஸ்போர்ட்டியான RS மாடலையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவது குறித்து அந்நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது. ஸ்டாண்டர்டு மாடலுக்கும், RS மாடலுக்கும் பவர்ட்ரெயின் அளவில் நிறையவே வேறுபாடுகளும் மேம்பாடுகளும் இருக்கும்.

ஸ்டாண்டர்டு கோடியாக் எஸ்யூவி மாடலில் 201 hp பவர் மற்றும் 320 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. RS மாடலில் 261 hp பவர் மற்றும் 400 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பவர்ஃபுல்லான இன்ஜின் கொடுக்கப்படும். மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 6.3 நொடிகளில் எட்டும் திறனை கோடியாக் RS மாடல் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வுல்லிங் ஸ்டார்லைட் 560

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் தங்கள் துணை நிறுவனமான வுல்லிங்கின் ஸ்டார்லைட் 560 கார் மாடலை எம்ஜி மோட்டார் இந்தியாவிற்குக் கொண்டு வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 7 சீட்டர் எஸ்யூவியை முதலில் ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் வடிவங்களிலும், அதனைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் வடிவிலும் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஹெக்டர் பிளஸ் என்ற 7 சீட்டர் எஸ்யூவி மாடலை இந்தியாவில் எம்ஜி மோட்டார் விற்பனை செய்து வருகிறது. அதற்கு மாற்றாகவே புதிய ஸ்டார்லைட் 560-யை அந்நிறுவனம் களமிறக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலே, கிளாஸ்டர் எஸ்யூவிக்குப் பதிலாக மெஜஸ்டர் எஸ்யூவியை எம்ஜி ஸ்வாப் செய்வதைப் பற்றிப் பார்த்தோம். அதேபோல் ஹெக்டர் பிளஸுக்கு மாற்றாக ஸ்டார்லைட் 560-யை அந்நிறுவனம் ஸ்வாப் செய்யவிருப்பதாகத் தெரிகிறது.

எம்ஜியின் ஹெக்டர் பிளஸ் மற்றும் கிளாஸ்டர் ஆகியவை விற்பனையில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே அவற்றுக்கு மாற்றாக அதே பிரிவில் வேறு கார்களை வெளியிடும் எம்ஜியின் திட்டம் நியாயமானதாகவே தோன்றுகிறது. விலையும் ஓரளவிற்கு கட்டுபடியாகும் பட்சத்தில் பிளக்-இன் ஹைபிரிட் ஸ்டார்லைட் 560 மாடலை முழுமனதாக நாம் வரவேற்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ, மஹிந்திரா XUV 7XO, டாடா சஃபாரி, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹூண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெக்டர் பிளஸ், சிட்ரன் C3 ஏர்கிராஸ், ஜீப் மெரிடியன் உள்ளிட்ட பல்வேறு 7 சீட்டர் எஸ்யூவி கார்கள் குறைவான விலை தொடங்கி ப்ரீமியம் விலை வரை விற்பனையில் இருக்கின்றன.

இந்தப் பட்டியலில் மேற்கூறிய கார்கள் புதிதாக இணையவிருக்கின்றன. புதிய கார்கள் கூடுதல் தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதோடு, கூடுதல் அம்சங்களையும் உடன் கொண்டுவரும். இது ஏற்கனவே இருக்கும் எஸ்யூவிக்களையும் நிறுவனங்களை அப்டேட் செய்ய வைக்கும். வரும் ஆண்டுகளில் 7 சீட்டர் எஸ்யூவி பிரிவு களைகட்டவிருக்கிறது.

Article Published On: Monday, May 11, 2026, 10:09 [IST]
English summary
Upcoming 7 seater suvs in india check all details here
மேலும்... #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+