அடுத்த ஒரு வாரத்தில் களமிறக்கப்படும் நான்கு புதிய கார்கள்! டாடாவின் எலெக்ட்ரிக் கார் தான் எல்லாரோட டார்க்கெட்!
இந்தியாவில் அடுத்த ஒரு மாத காலத்திற்கு 10 புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்திய கார் மார்க்கெட் பரபரப்பாக மாறி இருக்கும் சூழலில், அந்த புதிய 10 கார்களுள் நான்கு கார்கள் அடுத்த 1 வாரத்திற்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயமாகும். அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் (Honda City Facelift): 2023ஆம் ஆண்டில் ஹோண்டா சிட்டி மற்றும் அதன் ஹைப்ரீட் வேரியண்ட் காஸ்மெட்டிக் அப்கிரேட்களை பெற்றதை தொடர்ந்து, 3 வருடங்கள் கழித்து இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை மே 22ஆம் தேதியான இன்று பெற உள்ளது. இது, இன்னும் விரிவான அப்கிரேட்களாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இதன்படி, சிட்டி காரின் முன்பகுதி ஆனது முற்றிலுமாக ரீடிசைன் செய்யப்பட உள்ளது. அதேபோல், 16-இன்ச் அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்படலாம். 360-டிகிரி கேமரா, வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் புதிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை உள்ளிட்டவை புதிய சிட்டி மற்றும் சிட்டி ஹைப்ரீட் கார்களில் புதியதாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் ஆகும்.
ஹோண்டா இசட்.ஆர்-வி ஹைப்ரீட் (ZR-V Hybrid): இந்தியாவில் புதியதொரு விலையுயர்ந்த ஹோண்டா காராக இசட்.ஆர்-வி ஹைப்ரீட் கார் ஒன்றும் மே 22ஆம் தேதியான இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுமார் ரூ.40 லட்சம் - ரூ.50 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படும் இது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

சில வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இந்த காரில் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் அதனுடன் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. ஜப்பானில் இந்த ஹைப்ரீட் கார் லிட்டருக்கு 22கிமீ வரையிலான மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது. இசட்.ஆர்-வி காரின் விலை அதிகமாக எதிர்பார்க்கப்படுவதற்கு காரணம், இது முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவதினால் ஆகும்.
புதிய டாடா டியாகோ (New Tata Tiago): டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் விலை குறைவான ஹேட்ச்பேக் வகை காரான டியாகோவை வருகிற மே 28ஆம் தேதியில் அப்கிரேட் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. கிட்டத்தட்ட 11 வருடங்களாக விற்பனையில் இருக்கும் டியாகோ காருக்கு இது மூன்றாவது ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் ஆகும்.
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், டியாகோ காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்கள், முன்பக்க க்ரில், பம்பர் மற்றும் சக்கரங்களின் டிசைன் உள்ளிட்டவை மாற்றி வழங்கப்படும். டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு புதிய கலர் ஆப்ஷன்களையும் டாடா நிறுவனம் வழங்கலாம். தொழிற்நுட்ப அம்சங்களாக எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, அப்டேட்டான 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.
புதிய டாடா டியாகோ.இவி (Tiago.ev): பெட்ரோல் என்ஜின் டியாகோ கார் அப்கிரேட் செய்யப்படுவதை போன்று, டியாகோ இவி எலெக்ட்ரிக் காரும் வருகிற மே 28ஆம் தேதியில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதல்முறையாக கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டியாகோ.இவி ஆனது கடைசியாக கடந்த 2025 ஜனவரி மாதத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்று இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார்கள் சந்தை எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதற்கு அடுத்த ஒரு வார காலக்கட்டத்தில் நான்கு புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதுதான் சாட்சியாகும். ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், மே 28ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications