சிங்கிள் சார்ஜில் 500 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஹூண்டாய்! டாடாக்கு எதிரிகள் அதிகமாயிட்டே போறாங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் கார் தற்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது விலையை தவிர, கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன.

இதன் மூலம் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கும்? என்பதையும் நம்மால் ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது. அதாவது தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் அதே தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனமும் இயங்கி வருகிறது.

Hyundai Inster

எனவே இந்த 2 நிறுவனங்களும் பிளாட்பார்ம், இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கின்றன. அதாவது ஹூண்டாய் நிறுவனம் கியா நிறுவனங்களின் கார்கள் ஒரே பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்படும். ஒரே இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும். ஆனால் வெளிப்புற மற்றும் உட்புற டிசைனில் மட்டும் இந்த 2 நிறுவனங்களின் கார்களும் மாறுபட்டதாக இருக்கும்.

இதன்படி பார்த்தால் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே பேட்டரி ஆப்ஷன்கள் மற்றும் வசதிகள் எல்லாம், ஹூண்டாய் நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Kia Syros EV

இதில் 42 kWh பேட்டரி ஆப்ஷன் ஒன்றாகும். இந்த பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 443 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் மற்றொரு பேட்டரி ஆப்ஷன் 51.4 kWh ஆகும். இந்த பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 526 கிலோ மீட்டர் ஆகும். இவை அனைத்துமே அராய் அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதே பேட்டரி ஆப்ஷன்கள்தான் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கிட்டத்தட்ட இதே அளவிற்கான டிரைவிங் ரேஞ்ஜையும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம். மறுபக்கம் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் ஏராளமான அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதில், லெவல் 2 அடாஸ், டேஷ்கேம், பனரோமிக் சன்ரூஃப், ஓடிஏ அப்டேட்கள், முன் மற்றும் பின் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இதே வசதிகளை எல்லாம் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் ஆரம்ப விலை அனேகமாக 13-14 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. கியா சைரோஸ் இவி மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஆகிய இரண்டும் டாடா நெக்ஸான் இவி போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காருக்கும், கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கும் இடையே டிசைனில் நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்து வரும் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரின் டிசைனை தழுவி, அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, July 17, 2026, 12:03 [IST]
English summary
Upcoming hyundai electric cars expected battery options driving range and features
மேலும்... #hyundai #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out