40 கிமீ மைலேஜ் கொடுக்கும்.. ரூ.5 லட்சம் விலையில் வெளியாகும் புதிய மாருதி கார்கள் இவை தான்!!
இந்த 2026ம் ஆண்டு இந்தியாவில் மூன்று கார் மாடல்களை வெளியிடவுள்ளது மாருதி. அதில் ஒன்று இதுவரை நாம் பார்த்திராத முற்றிலும் புதிய கார். இரண்டு கார்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார் மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட வடிவங்களாக வெளியாகவுள்ளது. ஆனால் அனைத்துமே சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கள் தான். மாருதியின் இந்த மூன்று கார் மாடல்கள் எவைஎவை, என்னென்ன அம்சங்களுடன் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
மாருதியின் புதிய மைக்ரோ எஸ்யூவி:
Y43 என்ற குறியீட்டுப் பெயரில் முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யூவி மாடல் ஒன்றை கடந்த சில ஆண்டுகளாகவே உருவாக்கி வருகிறது மாருதி சுஸூகி. இதுவரை தொடக்கநிலை ஹேட்ச்பேக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் இந்த மைக்ரோ எஸ்யூவி பிரிவைத் தவறவிட்டு விட்டது. முந்திக் கொண்ட டாடா பன்ச் மாடலுக்குப் போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவி காரை உருவாக்கி வருகிறது. 2026ன் இறுதியில் அல்லது 2027ன் தொடக்கத்தில் இந்த எஸ்யூவியின் அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

இந்தப் புதிய எஸ்யூவி காரினை சந்தையில் களமிறங்குவதற்காகவே, ஏற்கனவே விற்பனையில் இருந்து வந்த இக்னிஸ் என்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலின் விற்பனையையும் மாருதி நிறுவத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் உள்ளிட்ட மாருதியின் பட்ஜெட் கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜினே புதிய Y43 எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படவுள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சத்திற்குள்ளான தொடக்க விலையில் இந்தக் காரினை நாம் எதிர்பார்க்கலாம்.
மாருதி ஃபிராங்க்ஸ் ஃபேஸ்லிப்ட்:
இந்தியாவில் மாருதியின் வெற்றிகரமான கார்களில் ஒன்றாக விற்பனையாகி வரும் ஃபிராங்க்ஸ் (Fronx) அப்டேட் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கும் இந்தக் காருக்கு மேலும் கூடுதல அம்சங்களைக் கொடுத்து மெருகேற்றவுள்ளது மாருதி. சமீபத்தில் இணையத்தில் கசிந்த ஸ்பை படங்களும் கூட புதிய ஃபிராங்க்ஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட உயர்தர வசதிகள் கொடுக்கப்படவிருப்பதை உறுதி செய்துள்ளன.

வசதிகளில் மட்டுமின்றி மெக்கானிக்கலாகவும் புதிய ஃபிராங்க்ஸை மாருதியிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல் இன்ஜினைக் கடந்து சீரிஸ் ஹைபிரிட் பவர்ட்ரெயினையும் புதிய கிராஸ்ஓவர் எஸ்யூவியில் மாருதி கொடுக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 1.2 லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுடன், எலெக்ட்ரிக மோட்டாரைக் கொண்டிருக்கும் இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயினானது லிட்டருக்கு 40 கிமீ மைலேஜைக் கொடுக்கும் வகையில் இருக்குமாம்.
சோதனை செய்யப்பட்டு வரும் ஃபிராங்க்ஸ் மாடலில் LIDAR/ ரேடார் சென்சார்கள் இருப்பதையும் ஸ்பைஷாட் புகைப்படங்களின் மூலம் பார்க்க முடிந்தது. இதனால் மேம்பட்ட ADAS பாதுகாப்பு அம்சங்களை புதிய ஃபிராங்க்ஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் அசிஸ்ட் ஆகிய வசதிகள் இருக்கலாம். இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கும்.
மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட்:
மாருதியின் முறையான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் என்றால் அது பிரெஸ்ஸா (Brezza) தான். டாடாவின் நெக்ஸானுக்குப் போட்டியாக இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் தற்போது அதிகம் விற்பனையாகும் கார் என்றால் அது நெக்ஸான் தான். எனவே அதற்குப் போட்டியாக அதிகளவில் விற்பனையாகும் வகையில் பிரெஸ்ஸாவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மாருதி சுஸூகி.
தற்போது இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர், NA பெட்ரோல் இன்ஜினை மட்டுமே மாருதி கொடுத்துள்ளது. ஆனால் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலில் ஃபிராங்க்ஸில் கொடுக்கப்பட்டு வரும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் மாருதி கொடுக்கலாம் எனத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்த டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படலாம்.
பிரெஸ்ஸா எஸ்யூவியை CNG பவர்ட்ரெயினுடனும் மாருதி விற்பனை செய்து வருகிறது. அந்த பவர்ட்ரெயினுக்கான CNG டேங்க் தற்போது பூட் ஸ்பேஸிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்டில் அதனை அண்டர்பாடியில் மாருதி கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. விக்டோரிஸ் எஸ்யூவியில் தான் முதல் முறையாக அண்டர்பாடி CNG டேங்க் அம்சத்தை அறிமுகப்படுத்தியது மாருதி. தற்போது அதனை பிரெஸ்ஸாவுக்கும் விரிவுபடுத்தவிருப்பதாகத் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபேஸ்லிப்ட் என்றவுடன் சில காஸ்மெடிக் அப்டேட்கள் மற்றும் சில புதிய வசதிகள் என்று பெயரளவில் அப்டேட்டை முடித்துவிடலாம், எது அந்தக் காருக்குத் தேவையோ அதனை கொடுத்து அப்டேட் செய்யவுள்ளது மாருதி. இதனால் தான் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் கார் பிராண்டாகவும் இருக்கிறது.
மேற்கூறிய அப்டேட்களுடன் மட்டும் புதிய கார்களை மாருதி வெளியிட்டலால் சந்தை சரவெடியாக வெடிக்கும். விக்டோரிஸ் மாடலை இதேபோன்ற எதிர்பார்ப்புகளுக்கிடையில் தான் அந்நிறுவனம் வெளியிட்டது. முதல் மாதத்திலிருந்தே விற்பனையில் பட்டாசாக வெடித்து வருகிறது விக்டோரிஸ். இந்தப் புதிய மற்றும் அப்டேட் செய்யப்படும் கார் மாடல்களில் இருந்து அப்படியான பெர்ஃபாமன்ஸையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications