2 புதிய 7 சீட்டர் கார்களை களமிறக்கும் மாருதி! விலை எவ்ளோனு தெரியுமா? பரவால கம்மியா இருக்கே!

இந்தியாவில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) எப்போதுமே நல்ல 'டிமாண்ட்' இருந்து வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஏராளமான 7 சீட்டர் எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகின்றன. இருப்பினும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம்தான் 7 சீட்டர் எம்பிவி கார் செக்மெண்ட்டின் 'கிங்' ஆக இருந்து வருகிறது.

இந்த செக்மெண்ட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து கொள்வதற்காக கூடிய விரைவில் 2 புதிய கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அந்த கார்கள் குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

Maruti Suzuki e Vitara

மாருதி சுஸுகி ஒய்எம்சி (Maruti Suzuki YMC): மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது எலெக்ட்ரிக் கார் ஒய்எம்சி. ஒய்எம்சி என்பது குறியீட்டு பெயர் மட்டுமே. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, இதற்கு வேறு ஒரு பெயர் சூட்டப்படும்.

குஜராத் மாநிலம் ஹன்சல்பூரில் உள்ள தொழிற்சாலையில் மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் எம்பிவி கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரும் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV), வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 (VinFast VF MPV 7) மற்றும் பிஒய்டி இமேக்ஸ்7 (BYD eMax7) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன் மாருதி சுஸுகி ஒய்எம்சி போட்டியிடும். ஹார்டெக்ட்-இ பிளாட்பார்ம் (Heartect-e Platform) அடிப்படையில், மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் எம்பிவி கார் உருவாக்கப்படவுள்ளது.

டொயோட்டா (Toyota) மற்றும் டைகாட்சூ (Daihatsu) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, சுஸுகி நிறுவனம் இந்த பிளாட்பார்ம்மை உருவாக்கியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் லைன்-அப்பில் மாருதி சுஸுகி இ விட்டாராவிற்கு மேலாக மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் எம்பிவி கார் நிலைநிறுத்தப்படவுள்ளது.

அதாவது மாருதி சுஸுகி இ விட்டாராவை விட, மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் எம்பிவி கார் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) 15.99 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் பாஸ் (BaaS) முறையில் வாங்கினால், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 10.99 லட்ச ரூபாய் மட்டும்தான். ஆனால் இந்த முறையை தேர்வு செய்தால் ஒரு கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் எம்பிவி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையானது, 17-18 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.

பாஸ் முறையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 12-13 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இதற்கான கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 4 ரூபாயாக இருக்கலாம். செயல்திறனை பொறுத்தவரை, மாருதி சுஸுகி இ விட்டாராவில் வழங்கப்பட்டுள்ள அதே 49 kWh மற்றும் 61.1 kWh பேட்டரி ஆப்ஷன்கள்தான் (Battery Options), மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் எம்பிவி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 440 கிலோ மீட்டர் மற்றும் 543 கிலோ மீட்டராக உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வசதிகளை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி இ விட்டாரா காரின் பெரும்பாலான அம்சங்களை, மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் எம்பிவி காரிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

இதன்படி 25.65 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 26.04 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 ஏர்பேக்குகள், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகள் எல்லாம், மாருதி சுஸுகி ஒய்எம்சி எலெக்ட்ரிக் எம்பிவி காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki Ertiga

புதிய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா (New-gen Maruti Suzuki Ertiga): இந்திய சந்தையில் தற்போது மிகவும் அதிகமாக விற்பனையாகும் எம்பிவி காராக மாருதி சுஸுகி எர்டிகா உள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 ஆயிரம் மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனையாகி வருகின்றன. தற்போதைய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா கார் கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் எர்டிகா காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ புதிய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா காரின் டிசைனை (Design) பொறுத்தவரையில், புதிய எல்இடி ஹெட்லைட்கள், புதிய எல்இடி டெயில்லைட்கள், புதிய எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய எல்இடி பனி விளக்குகள் மற்றும் முன் பகுதியில் புதிதாக பெரிய க்ரில் அமைப்பு போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்களும் (Colour Options) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம். மேலும் தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரில் சன்ரூஃப் வசதி கிடையாது. ஆனால் புதிய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா காரில் சன்ரூஃப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி எர்டிகா காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) எந்தவொரு மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள்தான் புதிய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா காரிலும் வழங்கப்படும் என நாங்கள் கருதுகிறோம்.

இதில், பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் ( Gear Box) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும்தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 8.85 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் புதிய தலைமுறை மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் 9-9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்ற எம்பிவி கார்களுடன், புதிய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா போட்டியிடும். அத்துடன் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) மற்றும் நிஸான் க்ராவைட் (Nissan Gravite) போன்ற எம்பிவி கார்களுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 7 பேர் செல்ல கூடிய வகையில் ஒரு புதிய எம்பிவி ரக காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி ஒய்எம்சி மற்றும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா ஆகிய கார்களுக்காக காத்திருக்கலாம்.

Article Published On: Saturday, July 11, 2026, 15:17 [IST]
English summary
Upcoming maruti suzuki 7 seater mpv cars ymc electric new gen ertiga
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out