பணக்காரர்களையும் வாங்க தூண்டும் 6 பட்ஜெட் விலை எஸ்யூவி கார்கள்! நாடே எதிர்பார்க்கும் கார் அறிமுகங்கள்!
மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு சாலையில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களும் எஸ்யூவி கார்களை அளவில் சற்று பெரியதாக மிட்-சைஸ் மாடல்களாக வாங்க விரும்புகின்றனர்.
இதனால், டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra), டொயோட்டா (Toyota), நிசான் (Nissan) மற்றும் ஸ்கோடா (Skoda) உள்ளிட்ட நிறுவனங்கள் மேலும் புதியதாக மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் ஃபேஸ்லிஃப்ட் (Mahindra Scorpio-N Facelift): தற்போதைக்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி காரான ஸ்கார்பியோ-என் விரைவில் புதிய தோற்றத்திற்கு அப்கிரேட் செய்யப்பட உள்ளது. இதன் அறிமுகம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி சமயத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்துணர்ச்சியான அப்ஹோல்ஸ்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி வசதிகள் புதிய ஸ்கார்பியோ-என் காரில் வழங்கப்படலாம்.
டாடா சியரா இவி (Tata Sierra EV): டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அதன் சியரா காரின் புதிய எலெக்ட்ரிக் வெர்சனை அடுத்த மூன்று மாதங்களில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் இந்த எலெக்ட்ரிக் கார் ஆனது ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா ஹாரியர் இவி (Harrier EV) எலெக்ட்ரிக் காரை காட்டிலும் விலைமிக்கதாக கொண்டுவரப்பட உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா (Toyota Urban Cruiser Ebella): சமீபத்தில் மாருதி சுஸுகியில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட இ-விட்டாரா காரின் அடிப்படையில் டொயோட்டா உருவாக்கிவரும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் தான், எபெல்லா ஆகும். இ-விட்டாராவின் அதே ஹார்டெக்ட்-இ பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் எபெல்லா ஆனது 49kWh மற்றும் 61kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
நிசான் டெக்டான் (Nissan Tekton): ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டஸ்டர் (Duster) காரின் அதே ஆர்-ஜி.எம்.பி (R-GMP) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் நிசான் கார், டெக்டான் ஆகும். ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இதனால், டஸ்டரில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் ஆப்ஷன்கள் தான் புதிய டெக்டானிலும் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஸ்கோடா கைலாக் ஸ்போர்ட்லைன் (Skoda Kylaq Sportline): இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கைலாக் காரில் புதியதாக ஸ்போர்டியரான வேரியண்ட் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போதைய கைலாக் கார் வேரியண்ட்கள் உடன் ஒப்பிடுகையில் தோற்றத்தில் மட்டும் வேறுப்பட்டதாக உருவாக்கப்படும் இதன் செயல்படுதிறனில் எந்த அப்கிரேட்களையும் எதிர்பார்க்க முடியாது என்றே கூறப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி.இ8 (Mahindra XUV.e8): மஹிந்திராவின் பிரபலமான எக்ஸ்யூவி700 காரின் புதிய எலெக்ட்ரிக் வெர்சனாக எக்ஸ்யூவி.இ8 விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த காரின் அறிமுகம் இந்த 2026ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே இருக்கும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் கார் அறிமுகம் செய்யப்படாததால் இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் இதன் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் பெரும்பாலானவை எலெக்ட்ரிக் கார்களாக இருப்பதை பார்க்கலாம். இதில் இருந்து எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் எந்த அளவிற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என்பதை அறிய முடிகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுள் நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் கார் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications