5 கலர் ஆப்ஷன், தரை மட்ட விலை! ஏகப்பட்ட பேர் ஒன்னா போகலாம்!
நிஸான் நிறுவனம் கிராவேட் என்ற காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தவுள்ளது.இதன் அறிமுகம் நெருங்கி வரும் நிலையில் இ்நத காகரில் உள்ள கலர் ஆப்ஷன்கள் மற்றும் புதிய அம்சங்கள் குறித்த விபரங்களை புதிய டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நிஸான் நிறுவனம் தனது கிராவேட் காரை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் அதிக போட்டி நிறைந்த மார்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் சிஎம்எஃப் - ஏ என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஃபிளாட்ஃபா்மில்தான் ரெனால்ட் டிரைபர் கார் இருக்கிறது. இந்த கார் டிரைபர் காரிலிருந்து சற்று வித்தியாசமாக தயாரிக்கப்படுகிறது.

இந்த கார் மொத்தம் 85 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் சிக்னேச்சர் நிறமான டீல் நிறத்தில் கார் வருகிறது. இது போக வெள்ளை, சில்வர், கருப்பு, கிரே, ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.இந்த காரில் சில காஸ்மெட்டிக் முக்கிய அம்சங்கள் இடம்பெறுகிறது. முக்கியமாக ரெலாட் டிரைபர் காரிலிருந்து இதை வித்தியாசப்படுத்தி காட்ட சில ்ம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக நீளவாக்கில் வைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல், ஸ்லீக்கான் ஹெட்லைட்ல, அகலமாக கிரில், பெரிய கிரில் பகுதி, பாடனல் பகுதியில் உள்ள கிரீஸ், போல்டான கிராவேட் என்ற ஆங்கில எழுந்து ஆகிய அம்சங்கள் வித்தியாசமாக உள்ளது.
பின்பக்கம் ஸ்பிலிட் எல்இடி டெயில் லைட், விஷூவலாக கனெக்ட் செய்யப்பட்ட நீளமான லைட், பின்பக்கம் நீளமான டெயில் கேட், அதில் கிரேட் என்ற எழுத்து ஆகியன உள்ளன. பின்பக்கம் ஸ்பிலிட் எல்இடி டெயில் லைட், உள்ளது. இந்த கிராவேட் காரின் இன்ஜினை பொருத்தவரைத 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் டர்போ சார்ஜ் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
கியர் பாக்ஸை பொருத்தவரை மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் சிறப்பம்சம் போட்டி கார்களை விட விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். டிரைபர் காரை போலவே இந்த காரும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரலாம். எம்பிவி செக்மெண்டில் இந்த கார் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்த காரின் உட்புறத்தை நிஸான் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இதில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, ஸ்டியரிங் மவுண்ட் கண்ட்ரோல், நவீன கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன், ஆகிய இடம் பெறும் என எதிர்பார்கலாம். இந்த காருடன் சேர்த்து நிஸான் நிறுவனம் மொத்தம் 3 கார்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து : இதில் நிஸான் சி -செக்மெண்ட் எஸ்யூவி கார் வரும் பிப்ரவரி 4ம் தேதி விற்பவனைக்கு வருகுிறது. பெரிய 3 வரிசை சீட்டர் கொண்ட சி செக்மெண்ட் எஸ்யூவி கார் வரும் 2027ம் நிதியாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இ்நத மூன்று மாடல் கார்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கிராவேட் கார் கடந்த 21ம் தேதியே வெளியாகவேண்டியது தற்போது தள்ளிபோயுள்ளது. இதன் அறிமுக தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








