அடுத்த ஒரு வருடத்தில் நாடே எதிர்பார்க்கும் மூன்று டாடா கார் அறிமுகங்கள்! மிடில்-கிளாஸ் மக்களால் வாங்க முடியுமா
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்த ஒரு வருடத்தில் 6 தயாரிப்புகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சியரா இவி எலெக்ட்ரிக் காரும் ஒன்றாகும். இதில் இன்னும் வேறு என்னென்ன மாதிரியான டாடா கார்கள் களமிறக்கப்பட உள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று டாடா மோட்டார்ஸ் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இதனை வருங்காலங்களிலும் தொடரும் முயற்சியாக அடுத்த ஒரு வருட காலக்கட்டத்தில் 6 கார்களை புதியதாக அறிமுகம் செய்ய உள்ளதாக டாடா மோட்டார்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 6 புதிய டாடா கார்களில் முதல் காராக சியரா இவி வருகிற ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சியரா இவி எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, தற்சமயம் விற்பனையில் இருக்கும் இரு டாடா கார்களுக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட உள்ளது. அதேபோன்று, விற்பனையில் இருக்கும் இரு டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கும் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்கள் வழங்கப்பட உள்ளன.
அதன்பின்பே 'அவின்யா' என்கிற புதியதொரு துணை பிராண்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அவின்யா பிராண்டை அறிமுகம் செய்வது மட்டுமின்றி, அதில் இருந்து சில தயாரிப்புகளும் 2027 மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கிடையில் டாடா சஃபாரி இவி எலெக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் 'சஃபாரி' பெயரில் மீண்டும் புதிய டாடா கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், தற்போதைக்கு டாடா சஃபாரி ஆனது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைத்துவரும் நிலையில், சஃபாரி இவி எலெக்ட்ரிக் கார் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மஹிந்திராவின் எக்ஸ்இவி 9எஸ் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக களமிறக்கப்படும் சஃபாரி இவி ஆனது வருகிற தீபாவளி பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தே அவின்யா எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெறவுள்ள பாரத் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா அவின்யா கார்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
கண்காட்சியில் ஹீரோவாக விளங்கினாலும், முதல் அவின்யா காரை அனைத்து மக்களும் வாங்கக்கூடிய விலையில் எதிர்பார்க்க முடியாது. நிச்சயமாக ரூ.40 லட்சம் - ரூ.50 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம். அந்த அளவிற்கு முதல் அவின்யா கார் ஆனது அளவில் பெரியதான எஸ்யூவி வகை காராக எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சியரா இவி, சஃபாரி இவி மற்றும் அவின்யா இவி எலெக்ட்ரிக் கார்கள் தான் அடுத்த ஒரு வருடத்திற்கு டாடா மோட்டார்ஸின் முக்கியமான கார் அறிமுகங்கள் ஆகும். இதில் ஒன்றை நீங்கள் கவனித்தால், மூன்றுமே எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். இதில் இருந்து எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் நிறுவனமாக மாறி வருகிறது என்பதை அறியலாம்.
மற்றப்படி, ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறவுள்ள அந்த நான்கு டாடா கார்கள் எவை என்பது குறித்த விபரங்கள் இல்லை. நெக்ஸான் கார்கள் கிட்டத்தட்ட கடந்த 3 வருடங்களாக அப்கிரேட் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதால், அவை ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறலாம். அதேபோன்று, டியாகோ மற்றும் டியாகோ இவி கார்களின் சோதனை ஓட்டங்களும் சமீப காலத்தில் நடத்தப்பட்டுள்ளன என்பதால், அவற்றின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications