டியாகோவில் அற்புதமான வசதிகளைக் கொடுத்து அசத்தும் டாடா.. வாங்குனா இந்த காரைத் தான் வாங்கனும்!

இப்போது மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) வெளியிடவிருக்கும் மேம்படுத்தப்பட்ட டியாகோ (Tiago) ஹேட்ச்பேக்கைத் தான். வரும் மே 28ம் தேதியன்று இந்தக் கார் வெளியாகிறது. பெட்ரோல், CNG மற்றும் எலெக்ட்ரிக் என மூன்று வடிவிலும் இந்தக் காரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மூன்றையுமே மேம்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

தற்போது மேம்படுத்தப்பட்ட டியாகோ iCNG காரில் புதிதாக என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன என சாம்பிள் காட்டும் விதமாக டீஸர் வீடியோ ஒன்றை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கிறது. அதில் டியாகோ CNG காரின் உட்புறம் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் காட்டப்பட்டிருக்கின்றன. குறைவான விலை கொண்ட காராக இருந்தாலும் செகமெண்டிலேயே முதல் முறையாக பல்வேறு வசதிகளை இந்த CNG ஹேட்ச்பேக்கில் டாடா கொடுக்கவிருக்கிறது. அவை என்னென்ன என்பதை இங்கே நாம் விரிவாகப் பார்க்கலாம்.

Tata Tiago iCNG

டியாகோ பெட்ரோல் காரும் CNG காரும் கிட்டத்தட்ட ஒன்று தான். CNG காரின் பூட்ஸ்பேஸில் டூயல் சிலிண்டருடன் கூடிய CNG கிட் கொடுக்கப்பட்டிருக்கும். காரின் வெளிப்புறம் ஆங்காங்கே CNG கார் என்பதைக் குறிக்கும் விதமாக iCNG பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.

இப்போது புதிய காருக்கு வருவோம். புதிய டியாகோ iCNG காரின் உட்புறமும் முற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டைக் கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்தப் புதிய டேஷ்போர்டு டிசைன் ஸ்லீக்காக, நீட்டாக இருக்கிறது. டேஷ்போட்டின் மேற்புறம் ப்ரீமியம் ஃபேப்ரிக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்த ஹேட்ச்பேக் காருக்கு ப்ரீமியமான லுக்கைக் கொடுக்கிறது.

Tata Tiago iCNG

தொழில்நுட்ப ரதியில் புதிய காரை மேம்பட்டதாகக் காட்டும் வகையில் ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஃப்ரீ ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை டீஸர் வீடியோவில் நாம் பார்க்க முடிகிறது. செண்டர் கண்சோல் முழுவதுமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருப்பதோடு, வழக்கமான கியர் லீவருக்குப் பதிலாக ரோட்டரி டிரைவ் செலக்டாரை புதிய ஃபேஸ்லிப்ட் மாடலில் கொடுத்துள்ளது டாடா.

இத்துடன் இந்த செக்மெண்டிலேயே முதல் முறையாக பேடில் ஷிப்டரைக் கொடுத்திருக்கிறது. இத்துடன் டூயல் வயர்லெஸ் சார்ஜிங் பேடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கமும் ஏசி வெண்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 360 டிகிரி கேமரா வசதியும் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஸ்டீயரிங் வீலில் எந்த மாற்றமும் இல்லை. இல்லுமினேட்டட் லோகோவுடன் இரண்டு ஸ்போக்குகள் கொண்ட தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீலே புதிய காரிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மெக்கானிக்கலாக புதிய ஃபேஸ்லிப்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. அதே 1.2 லிட்டர், 3 சிலிண்டர், ரெவ்ட்ரான் இன்ஜினே CNG கிட்டுடன் ஃபேஸ்லிப்டட் டியாகோ ஹேட்ச்பேக்கிலும் கொடுக்கப்படவுள்ளது. இந்த இரட்டை எரிபொருள் பவர்ட்ரெயினானது CNG-யில் இயங்கும் போது 75 hp பவர் மற்றும் 96.5 Nm டார்க்கைக் கொண்டிருக்கும். இந்த பவர்ட்ரெயினில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளே கொடுக்கப்படும்.

CNG எரிபொருள் கொண்ட கார்களில் மாருதியின் கார்களுக்கு அடுத்தபடியாக அதிக மைலேஜ் கொடுக்கும் காராக டாடாவின் இந்த டியாகோ iCNG இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியன்டானது கிலோவுக்கு 28.06 கிமீ வரையிலான மைலேஜும், மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்டானது கிலோவுக்கு 26.49 கிமீ வரையிலான மைலேஜும் கொடுக்கிறது. இது ARAI மைலேஜ் அளவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான விலையில் ஒரு CNG கார் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த டியாகோ CNG சிறந்த சாய்ஸாக இருக்கும். தற்போது மேம்படுத்தப்படும் நிலையில் இன்னும் ப்ரீமியமான அனுபவத்தையே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய குடும்பத்திற்கு ஏற்ற சிறப்பான காராக டியாகோ iCNG இருக்கும்.

Article Published On: Tuesday, May 26, 2026, 12:27 [IST]
English summary
Updated 2026 tata tiago icng features revealed through a teaser video
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out