விலை 4 லட்சம் கூட இல்ல! வெறும் சூரிய வெளிச்சத்திலேயே ஓடும் கார்! மொத்த உலகையும் மிரள விட்ட இந்திய நிறுவனம்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) செக்மெண்ட்டில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற நிறுவனங்களை எல்லாம் இதற்கு உதாரணமாக கூற முடியும்.

அதே நேரத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு சில சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும், புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், புனே நகரை சேர்ந்த வேவ் (Vayve) நிறுவனம் ஒன்றாகும். இந்த நிறுவனம் வேவ் எவா (Vayve Eva) என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Vayve Eva

இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எளிமையாக ஓட்டுவதற்கும், நெருக்கடியான இடங்களில் எளிமையாக பார்க்கிங் செய்வதற்கும் ஏற்ற சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும். ஆனால் இதன் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்தப்பட்டிருக்கும். இதுதான் இந்த எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.

இந்தியாவில் மேற்கூரையில் சோலார் பேனல் உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமை இதற்கு உண்டு. மற்ற எலெக்ட்ரிக் கார்களை போலவே, இந்த எலெக்ட்ரிக் காரையும் வழக்கமான சார்ஜர் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் மேற்கூரையில் உள்ள சோலார் பேனல் மூலமாக சூரிய வெப்பத்தை பயன்படுத்தியும் இந்த எலெக்ட்ரிக் கார் சார்ஜ் ஆகி கொள்ளும்.

Vayve Eva EV

ஒரு ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை, சூரிய வெப்பத்தின் மூலமாக கிடைக்கும் ஆற்றல் மூலமாகவே கடக்க முடியும் என்பது இந்த எலெக்ட்ரிக் காரின் முக்கியமான சிறப்பம்சமாக உள்ளது. இது சிறிய எலெக்ட்ரிக் கார் என்பதால், 2 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை என மொத்தம் 3 பேர் பயணம் செய்ய முடியும்.

இந்த எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும். அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளிலேயே இந்த எலெக்ட்ரிக் கார் கடந்து விடும். இந்த எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில், நோவா (Nova) ஒன்றாகும். இந்த வேரியண்ட்டில் 9 kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு (Battery Pack) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 125 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரின் மற்றொரு வேரியண்ட் ஸ்டெல்லா (Stella) ஆகும். இதில், 12.6 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 175 கிலோ மீட்டர்கள் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் காரின் 3வது மற்றும் கடைசி வேரியண்ட் வேகா (Vega) ஆகும். இதில், 18 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர்கள் ஆகும். இவை அனைத்துமே வேவ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 'ரியல் ரேஞ்ச்' (Real Range) ஆகும். அதாவது கிட்டத்தட்ட இதே அளவிற்கான ரேஞ்ஜை நீங்கள் பயன்படுத்தும்போதும் எதிர்பார்க்கலாம்.

சரி, விலை (Price) என்ற முக்கியமான விஷயத்திற்கு வருவோம். வேவ் எவா எலெக்ட்ரிக் காரின் நோவா வேரியண்ட்டின் விலை 3.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஸ்டெல்லா வேரியண்ட்டின் விலை 4.99 லட்ச ரூபாய் ஆகும். இந்த வரிசையில் வேகா வேரியண்ட்டின் விலை 5.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே வேவ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலை ஆகும்.

ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பு காரணமாக வேவ் எவா எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ளன. அதே சமயம் டெலிவரி (Delivery) பணிகள் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வேவ் நிறுவனத்தின் இணை நிறுவனர் உடன் யூடியூபர் கலந்துரையாடும் புதிய வீடியோ (Video) ஒன்று, Rahul Kulkarni Official என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், வேவ் எவா எலெக்ட்ரிக் காரின் வெளிப்புறம், உட்புறம், வசதிகள் மற்றும் இடவசதி என பல்வேறு அம்சங்களை நம்மால் காண முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் ஏராளமான புதுமைகள் புகுந்து வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த வேவ் எவா எலெக்ட்ரிக் கார். இது போன்ற தயாரிப்புகளுக்கு கிடைக்கும் வரவேற்பு, இன்னும் பல்வேறு புதுமையான தயாரிப்புகளை சந்தைக்கு கொண்டு வரும் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Monday, April 27, 2026, 18:01 [IST]
English summary
Vayve eva electric car new walkaround video price range bookings delivery and more details
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+