விஜய் கிடையாது! இவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்? யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

தமிழக சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. ஆனால் இதில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் நடிகர் விஜய்யின் (Vijay) தமிழக வெற்றிக் கழகம் (TVK - Tamilaga Vettri Kazhagam) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு இதுதான் முதல் தேர்தல். இருப்பினும் முதல் தேர்தலிலேயே திமுக (DMK) மற்றும் அதிமுக (ADMK) ஆகிய கட்சிகளை வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. இருப்பினும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை.

Vijay With Communist Leaders

எனவே மற்ற கட்சிகளின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் எதிர்நோக்கியுள்ளது. இதில், காங்கிரஸ் (Congress) மற்றும் கம்யூனிஸ்ட் (Communist) கட்சிகள், விஜய் முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து விட்டன. ஆனாலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை. எனவே மேற்கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (VCK - Viduthalai Chiruthaigal Katchi) ஆதரவும் தேவைப்படுகிறது.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் (Thirumavalavan) இன்னும் அவருடைய முடிவை அறிவிக்கவில்லை. அவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தால், விஜய் முதலமைச்சராக பதவியேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஆனால் இந்த சமயத்தில் மற்றொரு தகவலும் பரவி வருகிறது.

Thirumavalavan

அதாவது திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவதாகவும், அந்த அரசின் முதலமைச்சராக திருமாவளவன் இருப்பார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்திகள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் தமிழக அரசியலின் கிங் மேக்கராக திருமாவளவன் தற்போது உருவெடுத்துள்ளார்.

எனவே அவரை பற்றிய செய்திகளை இணையத்தில் தற்போது மக்கள் அதிகமாக தேட தொடங்கியுள்ளனர். எனவே திருமாவளவனின் வாகனங்கள் பற்றிய செய்திகளை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். திருமாவளவன் தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக (Chidambaram MP) இருந்து வருகிறார்.

கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அவர் எம்பியாக பதவியேற்றார். இதை முன்னிட்டு தாக்கல் செய்த வேட்புமனுவில், 5 வாகனங்கள் இருப்பதாக திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார். அவை 1 டெம்போ டிராவலர் (Tempo Traveller), 1 ஃபோர்டு என்டேவர் (Ford Endeavour), 1 ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் 2 டாடா சஃபாரி (Tata Safari) ஆகியவை ஆகும்.

இதில், டெம்போ டிராவலர் கடந்த 2011ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 11 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் ஃபோர்டு என்டேவர் கார் கடந்த 2021ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 32 லட்ச ரூபாய் ஆகும். மறுபக்கம் ஹூண்டாய் க்ரெட்டா காரானது கடந்த 2019ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 13.80 லட் ரூபாய் ஆகும்.

இதில், ஃபோர்டு என்டேவர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய 2 கார்களும், எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை ஆகும். இதில், ஃபோர்டு என்டேவர் கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறி விட்டது. மறுபக்கம் ஹூண்டாய் க்ரெட்டா காரானது, தொடர்ந்து அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு ஒரு டாடா சஃபாரி காரும், கடந்த 2016ம் ஆண்டு ஒரு டாடா சஃபாரி காரும் வாங்கப்பட்டுள்ளது. அவை இரண்டின் மதிப்பும் 15 லட்ச ரூபாய்தான். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் இந்த தகவல்களை எல்லாம் திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் உள்ள அனைத்து வாகனங்களுமே இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானவை ஆகும். இதில், டெம்போ டிராவலர் தவிர மற்ற அனைத்துமே எஸ்யூவி ரக கார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் தற்போது எஸ்யூவி ரக கார்களுக்குதான் அதிக 'டிமாண்ட்' இருந்து வருகிறது என்பது கவனித்தக்க விஷயம் ஆகும்.

Article Published On: Saturday, May 9, 2026, 11:21 [IST]
English summary
Vck thirumavalavan mp car collection ford endeavour hyundai creta tata safari tempo traveller
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+