முதல்வராக பதவியேற்க விஜய் வந்த 3 கோடி ரூபா காரின் ஓனர் அவங்களா! நாம நெனக்கறத விட ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கம்
தமிழக அரசியலில் கடந்த ஒரு சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. 'ஜோசப் விஜய் என்னும் நான்' என்ற சக்தி வாய்ந்த வாக்கியத்தை தமிழக மக்கள் இறுதியாக தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் (Chief Minister Vijay) இருந்து கேட்டுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் என்னும் தவெக (Tamilaga Vettri Kazhagam - TVK) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆனால் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் கடந்த சில நாட்களுக்கு குழப்பங்கள் நிலவி வந்தன. இருப்பினும் காங்கிரஸ் (Congress), கம்யூனிஸ்ட்கள் (Communist), விசிக (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (Indian Union Muslim League) ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளித்தன.
இதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் கிடைத்ததையடுத்து, விஜய் இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். சென்னை (Chennai) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் (Vijay's Oath-Taking Ceremony), தமிழக ஆளுநர் அர்லேகர் (Governor Arlekar), விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), கூட்டணி கட்சியினர், அரசு அதிகாரிகள், விஜய்யின் பெற்றோர் (Parents) மற்றும் நடிகை த்ரிஷா (Trisha) உள்பட பலரும் கலந்து கொண்டனர். விஜய் முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, அவரது அமைச்சரவையும் பதவியேற்று கொண்டது.
புஸ்ஸி ஆனந்த் (Bussy Anand), ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna), அருண் ராஜ் (Arun Raj), செங்கோட்டையன் (Sengottaiyan), ராஜ் மோகன் (Rajmohan). டாக்டர் பிரபு (Dr. Prabhu) உள்பட பலரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். முன்னதாக TN 07 DZ 5050 என்ற பதிவு எண் கொண்ட காரில், விஜய் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) கார் ஆகும். இந்த காரின் பதிவு எண்ணை வைத்து பாலிசி பஜார் தளத்தில் தேடியபோது, இது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரின் 300 ZX வேரியண்ட் (Variant) என்பது தெரிய வந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இதன் விலை 2.18 கோடி ரூபாயாக உள்ளது.
இது எக்ஸ்-ஷோரும் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் கார்தேக்கோ தரவுகளின்படி இதன் ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 2.75 கோடி ரூபாய் வருகிறது. இந்த காரில் 3.3 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது புத்தம் புதிய கார் ஆகும்.
விஜய் பயணம் செய்த இந்த கார் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அமைச்சராக பதவியேற்று கொண்டுள்ள ஆதவ் அர்ஜூனாவால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். ஆதவ் அர்ஜூனா நிறுவனராக (Founder) உள்ள நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரில் விஜய் பதவியேற்க வந்தது, கவனம் ஈர்த்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முதலமைச்சராக விஜய் பதவியேற்க வந்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஒரு சொகுசு கார் ஆகும். இதை 'எஸ்யூவி ரக கார்களின் கிங்' என்பார்கள். சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த கலவையாக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆஃப் ரோடு திறன்களிலும் தலை சிறந்து விளங்கும் கார் ஆகும்.
எனவே மிக சவாலான நிலப்பரப்புகளிலும், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் மிக எளிமையாக பயணம் செய்யும். இது போன்ற காரணங்களால் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications