ஸ்டாலின் ஆரம்பிச்சு வெச்சாரு! இன்னைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்குது!
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. வியட்நாமிற்கு வெளியே வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை இதுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த தொழிற்சாலை சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு தற்போதைய நிலையில் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய முடியும். தேவை ஏற்படும்பட்சத்தில் இந்த உற்பத்தி திறனை ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் எலெக்ட்ரிக் கார்களாக உயர்த்தி கொள்ள முடியும். இந்த சூழலில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தற்போது உற்பத்தியில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

10 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். தூத்துக்குடி தொழிற்சாலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அதாவது அங்கு உற்பத்தி தொடங்கப்பட்டு இன்னும் முழுமையாக ஒரு வருடம் கூட முடிவடையவில்லை.
அதற்குள்ளாக 10 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை வின்ஃபாஸ்ட் நிறுவனம் எட்டியுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தூத்துக்குடி தொழிற்சாலையில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் உற்பத்தியை தொடங்கி வைத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6), வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 (VinFast VF MPV 7) ஆகியவை ஆகும். இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 ஆகியவைதான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதே நேரத்தில் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 கார், வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் எதிர்காலத்தில் இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் (Electric Scooters) விற்பனைக்கு அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யவும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் எதிர்காலத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 (VinFast VF 3) எலெக்ட்ரிக் கார்தான் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இது மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அனேகமாக இந்திய சந்தையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் டாடா பன்ச் இவி (Tata Punch EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய சவாலாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications
