தமிழ்நாட்டை நம்பி வந்தவங்க கெட்டு போனதா வரலாறே இல்ல! பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் மிரள விட்ட கத்துக்குட்டி!

இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 6,434 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மறுபக்கம் 3,555 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) 2வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா (Mahindra) நிறுவனம் விற்பனை செய்த எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 3,065 ஆகும்.

MK Stalin In Thoothukudi VinFast Factory

இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்திருப்பது, இந்திய சந்தைக்கு புதுவரவு ஆகும். ஹூண்டாய் (Hyundai), கியா (Kia), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) போன்ற நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, அந்த நிறுவனம் 4வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. நாங்கள் வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனத்தை பற்றிதான் பேசி கொண்டுள்ளோம்.

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான், இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக காலடியே எடுத்து வைத்தது. ஆனால் அதற்குள்ளாகவே இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருக்கும் முன்னணி நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, வின்ஃபாஸ்ட் நிறுவனம் 4வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

VinFast Showroom

கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் வின்ஃபாஸ்ட் நிறுவனம் 375 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனம் 343 எலெக்ட்ரிக் கார்களையும், கியா நிறுவனம் 313 எலெக்ட்ரிக் கார்களையும், ஹூண்டாய் நிறுவனம் 262 எலெக்ட்ரிக் கார்களையும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 237 எலெக்ட்ரிக் கார்களையும் மட்டுமே விற்பனை செய்துள்ளன.

இதன் மூலம் 4வது இடத்தை பிடித்திருப்பதுடன் மட்டுமல்லாது, அதற்குள்ளாகவே ஒட்டுமொத்தமாக 1,000 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லையும், வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்துள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள்ளாக ஒட்டுமொத்தமாக சுமார் 830 எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இதை தொடர்ந்து நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தற்போது வரையிலேயே 200க்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆக மொத்தத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் 1,000 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அவை வின்ஃபாஸ்ட் விஎஃப்6 (VinFast VF6), வின்ஃபாஸ்ட் விஎஃப்7 (VinFast VF7) ஆகியவை ஆகும். தற்போதைய நிலையில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே வின்ஃபாஸ்ட் விற்பனை செய்து கொண்டுள்ளது. ஆனால் வரும் மாதங்களில் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் வேகமாக டீலர்ஷிப்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. அந்த நிறுவனம் வேகமாக பிரபலமடைந்து கொண்டிருப்பதற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில்தான் இயங்கி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 13, 2026, 20:32 [IST]
English summary
Vinfast becomes 4th largest electric car maker in december 2025 check all details here
மேலும்... #VinFast #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+