ஒரு கி.மீட்டருக்கு வெறும் ரூ.8 மட்டும்தானா?.. சென்னை, பெங்களூரில் டாக்ஸி சேவையை துவங்குகிறது வின்ஃபாஸ்ட்

இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் தடம் பதித்துள்ள வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், தற்போது பயணிகள் போக்குவரத்துத் துறையிலும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கிரீன் எஸ்எம் (Green SM) எலக்ட்ரிக் டாக்ஸி சேவையானது விரைவில் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களிலும் அறிமுகமாக உள்ளது.

ஏற்கனவே டெல்லி என்சிஆர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களிலும் தனது சேவையை விரிவுபடுத்த தயாராகியுள்ளது. குறிப்பாக, முழுவதும் மின்சார வாகனங்களைக் கொண்டு டாக்ஸி சேவையை வழங்குவதுடன், ஓலா மற்றும் உபர் நிறுவனங்களைவிட குறைவான கட்டணத்தில் சேவை வழங்கும் என்பதால் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Green SM

கர்நாடகாவில் உரிமம்

பெங்களூர் நகரில் டாக்ஸி சேவையைத் தொடங்குவதற்கான அனுமதியை கிரீன் எஸ்எம் நிறுவனம் பெற்றுள்ளது. கர்நாடகப் போக்குவரத்துத் துறையிடமிருந்து திரட்டுநர் உரிமத்தை (Aggregator Licence) பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெங்களூருவில் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான சட்டப்பூர்வமான அடிப்படை கிடைத்துள்ளது.

டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கான திரட்டுநர் உரிமங்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இதில் முதல் மூன்று மாநிலங்களும் டெல்லி என்சிஆர் சேவைக்குப் பயன்படுகின்றன. கர்நாடகாவிலும் சேவைக்கான உரிமம் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கான அனுமதி குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Also Read

கார் மாடல்

கிரீன் எஸ்எம் நிறுவனம் தனது டாக்ஸி சேவைக்காக வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன் (VinFast Limo Green) எலெட்ரிக் எம்பிவி கார்களைப் பயன்படுத்துகிறது. பயணிகள் போக்குவரத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த மின்சார கார், விசாலமான உட்புற அமைப்பு மற்றும் பயணிகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லிமோ கிரீன் மாடல் ஏழு இருக்கைகளைக் கொண்டுள்ளது. குடும்பப் பயணங்கள், விமான நிலையப் போக்குவரத்து மற்றும் அலுவலகப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஒரே காரில் அழைத்துச் செல்லும் வசதி கிடைக்கும்.

Also Read

5 மாதங்களில் 15 லட்சம் பயணங்கள்

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் டெல்லி என்சிஆர் பகுதியில் சேவையைத் தொடங்கிய இந்த நிறுவனம், முதல் ஐந்து மாதங்களிலேயே 15 லட்சத்திற்கும் அதிகமான பயணங்களை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வின்ஃபாஸ்ட் லிமோ கிரீன் மின்சார கார்களைக் கொண்டு இந்த சேவை செயல்பட்டு வருகிறது. தற்போது ஹைதராபாத்திலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஒரு கிலோமீட்டருக்கு ரூ.8 கட்டணம்?

கிரீன் எஸ்எம் டாக்ஸி சேவை ஒரு கிலோமீட்டருக்கு வெறும் ரூ.8 மட்டுமே கட்டணம் வசூலிக்கும் என அண்மையில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவலை நிறுவனம் மறுத்துள்ளது. ரூ.8 கட்டணம் தொடர்பான செய்திகள் தவறானவை என்றும், அந்தந்த மாநிலங்களின் போக்குவரத்து விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், பயணிகள் முன்பதிவு செய்வதற்கு முன்பாகவே செயலியில் பயணக் கட்டணத்தைப் பார்க்க முடியும். பயண தூரம், சலுகைகள், சுங்கக் கட்டணம் உள்ளிட்டவற்றைப் பொறுத்து இறுதிக் கட்டணம் மாறுபடலாம். எனவே, பெங்களூரு மற்றும் சென்னையில் அறிமுகமாகும்போது என்ன கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஓட்டுனர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான உள்ளூர் ஓட்டுனர்களுக்கு வருமான வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக கிரீன் எஸ்எம் தெரிவித்துள்ளது. ஓட்டுனர்களுக்குத் தொழில்முறை பயிற்சி, வாடிக்கையாளர் சேவை தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய டாக்ஸி சந்தையில், முழுவதும் மின்சார கார்களைக் கொண்டு களமிறங்கும் கிரீன் எஸ்எம் புதிய போட்டியை உருவாக்கி வருகிறது. குறிப்பாக பெங்களூரு மற்றும் சென்னையில் இதன் வருகை எலக்ட்ரிக் டாக்ஸி பயன்பாட்டை அதிகரிக்குமா என்பதையும், பயணிகளுக்கு எந்த அளவிலான கட்டணச் சலுகைகளை வழங்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Article Published On: Saturday, November 14, 2026, 14:36 [IST]
English summary
Vinfast green sm electric taxi bengaluru chennai launch
மேலும்... #VinFast
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out