மஹிந்திராவிற்குப் போட்டியாக 500 கிமீ ரேஞ்சுடன் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் நிறுவனம்

வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் வின்ஃபாஸ்ட், இந்தியாவிலும் கடந்த ஆண்டிலிருந்து எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் தான் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை VF8 எலெக்ட்ரிக் காரை வியட்நாமில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது அதே காரை இந்தியாவிலும் காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்த VF8 எலெக்ட்ரிக் காரை இந்தியாவிலும் வின்ஃபாஸ்ட் வெளியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது VF6 மற்றும் VF7 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களையும், எம்பிவி 7 என்ற எலெக்ட்ரிக் எம்பிவி காரையும் வின்ஃபாஸ்ட் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இவற்றில் VF7 தான் அதன் டாப் எண்டு காராக இருந்து வருகிறது. VF8 இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் இந்த VF7-க்கு மேலாக வின்ஃபாஸ்டின் புதிய ஃப்ளாக்ஷிப் காராக இருக்கும்.

Vinfast VF8

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அனைத்து கார்களுமே முதல் தலைமுறை வடிவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. VF8 கார் தான் வின்ஃபாஸ்டின் உலகாளவிய லைன்-அப்பில் இரண்டாம் தலைமுறை அப்டேட்டைப் பெறும் முதல் எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

4,701 மிமீ நீளம், 1,872 மிமீ அகலம் மற்றும் 1,670 மிமீ உயரத்துடன் நல்ல இடவசதி கொண்ட காராகவே புதிய VF8 இருக்கிறது. ஆனால் முதல் தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது அளவில் கொஞ்சம் சிறியது தான், குறிப்பாக நீளம் மற்றும் அகலத்தில். 2,840 மிமீ வீல் பேஸுடன், 170 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸையும் கொண்டுள்ளது இந்தக் கார்.

Vinfast VF8

ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திராவின் மூன்று வரிசை சீட்கள் கொண்ட XEV 9S எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும் போது கொஞ்சமே கொஞ்சம் அளவில் சிறியதாக இருக்கிறது இந்த வின்ஃபாஸ்ட் VF8. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கிரௌண்டு கிளியரன்ஸ் உட்பட அனைத்து அளவுகளும் 30 மிமீ முதல் 70 மிமீ வரை VF8-ல் சிறியதாக இருக்கின்றன.

இந்த இரண்டாம் தலைமுறை VF8 எலெக்ட்ரிக் எஸ்யூவியில், 60.13 kWh பேட்டரி பேக்கைக் கொடுத்திருக்கிறது வின்ஃபாஸ்ட். இத்துடன் 228 hp பவர் மற்றும் 330 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் செட்டப்பானது 500 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் என வின்ஃபாஸ்ட் தெரிவித்துள்ளது. முதல் தலைமுறை VF8 காருடன் ஒப்பிட்டால் பவர் மற்றும் டார்க் தவிர மற்ற அனைத்து அளவுகளும் குறையவே செய்திருக்கின்றன.

புதிய காரில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் வசதியைக் கொடுத்துள்ளது வின்ஃபாஸ்ட். முதல் தலைமுறை மாடலில் ஆல் வீல் டிரைவ் வசதியும் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இரண்டாம் தலைமுறை மாடலில் அது கொடுக்கப்படவில்லை. மேலும் XEV 9S எஸ்யூவியுடன் ஒப்பிட்டாலும், இந்த VF8 ஒரு 5 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

12.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, டிரைவர் சீட்டில் மெமரி ஃபங்ஷன், ADAS பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய வசதிகள் இரண்டாம் தலைமுறை VF8 எஸ்யூவியில் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் தலைமுறை காரில் கொடுக்கப்பட்டு வந்த பனோரமிக் சன்ரூஃப் புதிய காரில் கொடுக்கப்படவில்லை. அதேபோல் நிறைய வசதிகள் டவுன்கிரேடு தான் செய்யப்பட்டிருக்கின்றன.

VF7 எலெக்ட்ரிக் எஸ்யூவியானது 21.89 லட்சம் ரூபாய் முதல் 26.79 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய VF8 இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் இதனை விட சற்று கூடுதல் விலையிலேயே வெளியாகும் எனத் தெரிகிறது. எனினும் இந்தக் காரின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை எதையும் வின்ஃபாஸ்ட் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க கருத்து: கடந்தாண்டு தான் இந்தியாவில் கால் பதித்து வளர்ந்து வரும் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாகவே அறியப்படுகிறது வின்ஃபாஸ்ட். எனினும் வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவரும் பொருட்டு நிறைய புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதோடு, நம்பிக்கையைப் பெறும் பொருட்டு போதுமான வசதிகளுடன் ப்ரீமியமாகவும் கொடுத்து வருகிறது.

இந்தப் புதிய காரும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தான் மாருதிக்கு இணையாக 1000 எலெக்ட்ரிக் கார்களுக்கும் மேலாக இந்தியாவில் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. வரும் மாதங்களில் இதன் விற்பனை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Wednesday, May 27, 2026, 18:31 [IST]
English summary
Vinfast patented vf8 electric suv design in india when will it launch
மேலும்... #VinFast #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out