அமெரிக்காவுக்கே டஃப் குடுக்கும் தமிழ்நாட்டு நிறுவனம்! பொட்டல் காட்ல இருந்து வந்திருந்தாலும் மிரள விட்டுட்டாங்க
இந்திய ஆட்டோமொபைல் துறையின் தலைநகரமாக தமிழ்நாடு (Tamil Nadu) இருந்து வருகிறது. ஏனெனில் உலகின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலையை அமைத்துள்ளன. இந்த வரிசையில் வியட்நாம் நாட்டை வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனமும் சமீபத்தில் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை அமைத்தது.
இந்திய சந்தைக்கு புதுவரவான வின்ஃபாஸ்ட் நிறுவனம், எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) தயாரிப்பதில், அமெரிக்காவின் டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கே சவால் அளிக்க கூடியதாக கருதப்படுறது. அதன் பிரம்மாண்டமான தொழிற்சாலை, பெரிதாக தொழில் வளர்ச்சி பெறதா தமிழ்நாட்டின் தென் பகுதியான தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கடந்த மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) கார்வாலே தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 691 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய பிப்ரவரி மாதம் வெறும் 384 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது இம்முறை 307 எலெக்ட்ரிக் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் வின்ஃபாஸ்ட் நிறுவனம் 79.95 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. குறுகிய காலத்திலேயே வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை இந்த எண்கள் நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன. வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூடிய விரைவில் தனது 3வது எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 (VinFast VF MPV 7) ஆகும்.
வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 ஆகியவை எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தவை. ஆனால் இந்திய சந்தைக்கான வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 3வது கார், எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். எனவே அந்த காரில் 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.
வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் கார், வரும் ஏப்ரல் 15ம் தேதி (April 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 50 டீலர்ஷிப்கள் (Dealerships) மட்டுமே உள்ளன. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்தியாவில் தனது டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை 75 ஆக உயர்த்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதேபோல் சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கையையும் தற்போதைய 130 என்ற எண்ணிக்கையில் இருந்து 230 ஆக உயர்த்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களையும் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








