தேர்தல்ல ஜெயிச்சா இந்த குட்டி காரை இலவசமா கூட குடுக்கலாம்! மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டை திரும்பி பாக்க போகுது

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும். தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தொழிற்சாலையை நிறுவியுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வருகிறது.

அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6), வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 (VinFast VF MPV 7) ஆகியவை ஆகும். இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் கார் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

VinFast VF 3 Side Design

இந்த வரிசையில் கூடிய விரைவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் மேலும் ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் 3 எலெக்ட்ரிக் கார்களுக்கும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எலெக்ட்ரிக் காருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று உள்ளது. அது விலை (Price) ஆகும்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் 3 எலெக்ட்ரிக் கார்களுமே சற்று விலை உயர்ந்தவையாக உள்ளன. வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் 17.29 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 21.89 லட்ச ரூபாயாக இருக்கிறது.

VinFast VF 3

இந்த வரிசையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 24.49 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் களமிறங்கவுள்ளது. வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 (VinFast VF 3) எலெக்ட்ரிக் காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV), எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு நேரடி போட்டியாக வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 விற்பனைக்கு வரவுள்ளது.

இது 2 கதவுகளை மட்டுமே கொண்ட ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். அதிகபட்சமாக 4 பேர் பயணம் செய்ய கூடிய வகையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது உருவத்தில் மிகவும் சிறியதாக இருக்கும். எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும், முதல் முறையாக எலெக்ட்ரிக் கார் வாங்குபவர்களுக்கும் இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

இது பார்ப்பதற்கு எஸ்யூவி (SUV) ரக கார் போல் தோற்றமளிக்கும் ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும். வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரில், 18.64 kWh பேட்டரி (Battery) தொகுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 215 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டிரைவிங் ரேஞ்ச் (Driving Range), நகர பயன்பாடுகள் மற்றும் அருகில் உள்ள நகரங்களுக்கு பயணம் செய்வதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 40 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் என்ற அளவில் இருக்கலாம். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் கார் 5.3 வினாடிகளில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏர்பேக்குகள் மற்றும் ஈக்கோ மற்றும் நார்மல் என 2 டிரைவிங் மோடுகள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார், அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை வெறும் 7-8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக அதிக ஓட்டுக்களை பெற்று வெற்றி தேடி தரும் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு பைக்குகள் போன்ற வாகனங்களை பரிசளிப்பது வழக்கம். ஆனால் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 மிகவும் விலை குறைவானது என்பதால், எதிர்காலத்தில் இது கூட இலவச பரிசாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலையில்தான் இந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 17, 2026, 16:02 [IST]
English summary
Vinfast vf 3 set to launch by year end in india expected price driving range features and more
மேலும்... #VinFast #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+