டாடா இருந்த இடமே தெரியாம போக போகுது! அந்த விலை குறைவான காரை இந்திய மார்க்கெட்டில் களமிறக்க போறாங்களா!

வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicles) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). எலெக்ட்ரிக் கார்கள் (Electric cars) மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) என பலதரப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அமெரிக்காவின் (US) டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கே போட்டியாக கருதப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) தென் பகுதியான தூத்துக்குடியில் (Thoothukudi) அமைந்துள்ளது.

Vinfast VF 5

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போதைய நிலையில் 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும். ஆனால் இவை இரண்டுமே சற்று விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களாக உள்ளன.

இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.29 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 21.89 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

Vinfast VF 5 EV

இந்த 2 எலெக்ட்ரிக் கார்களின் விலையும் சற்று அதிகமாக இருக்கும் காரணத்தால், கூடிய விரைவில் விலை குறைவான புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அது வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 (VinFast VF 5) ஆகும்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் (VinFast Limo Green) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 (VinFast VF 3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை எல்லாம் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்குவது குறித்து வின்ஃபாஸ்ட் பரிசீலனை செய்து கொண்டுள்ளது என்பது ஏற்கனவே நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த வரிசையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் காரையும், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது குறித்து, வின்ஃபாஸ்ட் நிறுவனம் பரிசீலனை செய்து வருவதாக, ஆட்டோகார் இந்தியா தளம் கூறியுள்ளது. இது எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் (Electric Hatchback) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு இடைப்பட்ட மாடலாக இது இருக்கும். இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அதன் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். மறுபக்கம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.29 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை இரண்டுக்கும் இடைப்பட்ட மாடல் என்பதால், வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 12 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காரை விட, வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் கார், உருவத்தில் சற்றே பெரியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், 29.6 kWh மற்றும் 37.23 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவது பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 269 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும், 2வது பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 326 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான், இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக காலடி எடுத்து வைத்தது. ஆனால் அதற்குள்ளாகவே இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 1,000 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்து விட்டது.

வெறும் 2 எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனையில் இருக்கும் நிலையில், மிகவும் குறுகிய காலத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்த மைல்கல்லை கடந்துள்ளது. ஆனால் வரும் காலங்களில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அத்துடன் புதிய ஷோரூம்களை திறக்கும் பணிகளையும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

எனவே எதிர்காலத்தில் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமாக வின்ஃபாஸ்ட் மாறும் என நாம் எதிர்பார்க்கலாம். இந்த செய்தியில் நாம் பார்த்த வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு வந்தால், அது டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 19, 2026, 12:15 [IST]
English summary
Vinfast vf 5 india launch details expected price features driving range
மேலும்... #VinFast #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+