எமனே நேரா வந்தாலும் வேலைக்கே ஆகாது! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாட்டு கார்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6). இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இது அதிநவீன சொகுசு வசதிகள் நிரம்பிய கார் என்பதுடன், மிகவும் பாதுகாப்பானது என்பதும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆம், பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனையில் (Crash Test) வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 கார் தற்போது முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது.

பாரத் என்சிஏபி என்பது மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். கார்களை மோதல் சோதனைக்கு உட்படுத்தி, அவற்றுக்கு பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வழங்கும் பணியை பாரத் என்சிஏபி அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த வரிசையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் பாரத் என்சிஏபி அமைப்பு மோதல் சோதனைக்கு உட்படுத்தியது.
இதில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 27.13 புள்ளிகளை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 ஸ்கோர் செய்துள்ளது. மறுபக்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 44.41 புள்ளிகளை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 ஸ்கோர் செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 பிரிவினருக்குமான பாதுகாப்பிலும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஆட்டோ லேன் சேஞ்சிங் அஸிஸ்ட், எமர்ஜென்ஸி லேன் கீப்பிங் அஸிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் முன் மற்றும் பின் பகுதியில் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக் போன்ற பாதுகாப்பு வசதிகளை எல்லாம் உள்ளடக்கிய அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொகுப்பும் வழங்கப்படுகிறது.
முன்னதாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மற்றொரு எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரான வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) காரும், பாரத் என்சிஏபி மோதல் சோதனையில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.29 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 21.89 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களும், தமிழ்நாட்டின் தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளதால், வரும் மாதங்களில் அவற்றின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








