ரூ.20 லட்சத்திற்குள் கிடைக்கும் கியா, மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள்! தூத்துக்குடியில் உருவாகும் காரை வாங்கலாமா?

வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனத்தில் இருந்து புதிய 7-சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி காரான விஎஃப் எம்பிவி 7 (VF MPV 7) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.18 லட்சம் என்கிற அளவிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய விஎஃப் எம்பிவி 7 சற்று அதிகமாக ரூ.24.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். விலையை போன்று, பல்வேறு விதமான வேரியண்ட்களில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விஎஃப் எம்பிவி 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.18 லட்சத்தில் எதிர்பார்க்கப்பட்டு ரூ.24.49 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பினும், புதிய விஎஃப் எம்பிவி 7 ஆனது கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராகவே கருதப்படுகிறது.

vinfast vf mpv 7 electric alternatives in that price

ஏனெனில், விற்பனையில் இந்த புதிய வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக விளங்கும் மற்ற எலெக்ட்ரிக் கார்களும் கிட்டத்தட்ட இந்த விலையில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய எலெக்ட்ரிக் கார்கள் என்னென்ன என்பதை பற்றியும், அவற்றின் விலைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

பி.ஒய்.டி இமேக்ஸ் (BYD eMAX 7): ரூ.26.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனை செய்யப்படும் இந்த சீன எலெக்ட்ரிக் கார் ஆனது 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விஎஃப் எம்பிவி 7 போன்று இதுவும் எலெக்ட்ரிக் எம்பிவி கார் தான். ஆதலால், இமேக்ஸ் 7 காரிலும் நன்கு விசாலமான உட்புற இடவசதி கிடைக்கிறது.

vinfast vf mpv 7 electric alternatives in that price

கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV): கொரியன் ஸ்டைல் எலெக்ட்ரிக் எம்பிவி காரான இது ரூ.17.99 லட்சத்தில் இருந்து ரூ.24.99 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 7 இருக்கைகள் உடன் குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். 42kWh மற்றும் 51.4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEv 9S): மஹிந்திராவின் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து அதனை குறைந்த விலையில் வழங்கும் முயற்சியாக எக்ஸ்இவி 9எஸ் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.19.95 லட்சத்தில் இருந்து கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் காரில் அளவில் பெரியதான 79kWh பேட்டரி வழங்கப்படுகிறது.

பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3): 5-சீட்டர் எலெக்ட்ரிக் காரை பிரீமியம் தரத்தில் பிஒய்டி பிராண்டில் வாங்க விரும்புபவர்களின் சாய்ஸாக இந்த கார் உள்ளது. அதற்கேற்ப இந்த எலெக்ட்ரிக் காரின் விலையும் சற்று அதிகமாக ரூ.24.99 லட்சம் முதல் ரூ.33.99 லட்சம் வரையில் உள்ளன. இந்த அளவிற்கு இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பாதுகாப்பு மற்றும் தொழிற்நுட்பங்களும் உயர் தரத்தில் வழங்கப்படுகின்றன.

டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV): ரூ.21.49 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் இதுவும் 5 இருக்கைகளை கொண்ட டாடா எலெக்ட்ரிக் கார் ஆகும். 5 இருக்கைகளை மட்டுமே கொண்டிருப்பினும், ட்யூயல்-மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் (AWD) சிஸ்டம் மற்றும் பிரீமியம் தரத்திலான கேபின் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளதால் ஹாரியர் இவி சிறந்ததாக விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கி உள்ளது. மற்ற போட்டி கார்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இதன் விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.24.49 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது சற்று ஏமாற்றத்தை தந்து இருப்பினும், மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் சவாலான விலையில் தான் புதிய விஎஃப் எம்பிவி 7 உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2026, 19:17 [IST]
English summary
Vinfast vf mpv 7 electric alternatives in that price in india byd emax 7 to tata harrier ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+