கொரியன், சீன கம்பெனிகளுக்கு போட்டியாக வின்ஃபாஸ்டின் புதிய எலெக்ட்ரிக் கார்! விலை இன்று அறிவிப்பு!

வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் இந்தியாவில் அறிவித்தப்படி அதன் 'விஎஃப் எம்பிவி 7' (VF MPV 7) என்கிற புதிய எலெக்ட்ரிக் காரை ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில், விலைகள் அறிவிக்கப்பட்டு கார் அதிகாரப்பூர்வமாக இன்று விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தற்சமயம் விஎஃப்6 மற்றும் விஎஃப்7 என்கிற இரு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் பார்க்கும்போது, புதிய விஎஃப் எம்பிவி 7 ஆனது மூன்றாவது எலெக்ட்ரிக் கார் ஆகும். விற்பனையில் இந்த புதிய வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் காருக்கு கியா (Kia) நிறுவனத்தின் கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Carens Clavis EV) மற்றும் பிஒய்டி (BYD) நிறுவனத்தின் இமேக்ஸ் 7 (eMax 7) எலெக்ட்ரிக் கார்கள் போட்டியாக விளங்க உள்ளன.

vinfast vf mpv 7 electric car price

எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.18 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த காரின் விபரங்கள் வெளியீடு செய்யப்பட்டதுடன், காருக்கான ப்ரீ-புக்கிங்குகளும் (Pre-bookings) கடந்த ஏப்ரல் 2ஆம் தேதியே ரூ.21,000 என்கிற டோக்கன் தொகையில் துவங்கப்பட்டு விட்டன.

புதிய விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது 7 இருக்கைகள் உடன் அளவில் பெரியதான எம்பிவி ரக எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் காரை டாக்சி (Taxi) உள்ளிட்ட கமர்ஷியல் (Commercial) பயன்பாட்டிற்காகவும் வழங்க வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது.

vinfast vf mpv 7 electric car price

கமர்ஷியல் பயன்பாட்டிற்கு இதே பெயரில் இல்லாமல், 'லிமோ க்ரீன்' (Limo Green) என்கிற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால், லிமோ க்ரீனின் வருகை 2026ஆம் ஆண்டின் இறுதியில்தான் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களை போன்று பேட்டரி-அஸ்-அ-சர்வீஸ் (BaaS) திட்டத்தில் புதிய விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட போவதில்லை.

மற்ற நிறுவனங்கள் தங்களது எலெக்ட்ரிக் கார்களை குறைவான விலையில் விற்பனை செய்ய BaaS திட்டத்துடனும் விற்பனை செய்யும் நிலையில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் அந்த திட்டத்தை பின்பற்ற போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளதால், புதிய விஎஃப் எம்பிவி 7 காரை வாங்குவோர் அதன் பேட்டரிக்கான உரிமையாளராகவும் திகழ்வர்.

புதிய விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டாரில் 60.1kWh திறன் கொண்ட பேட்டரி கிடைக்கும். இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 280 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. மோட்டாரின் இயக்க ஆற்றல் காரின் முன் சக்கரங்களுக்கு செல்லக்கூடியதாக இருக்கும் என வின்ஃபாஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் காரின் 60.1kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 500கிமீ வரையில் செல்லலாம் என்கிறது வின்ஃபாஸ்ட் நிறுவனம். நிஜ உலக சூழலில் இந்த அளவிற்கான ரேஞ்சை பெற முடியாது என்றாலும், இதில் 75% ரேஞ்சை ஆவது பெறலாம். 80 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் டிசி சார்ஜர் (Fast DC Charger)-இன் உதவியுடன் இந்த காரின் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 10%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார் சந்தையில் புதிய நிறுவனமாக இருப்பினும், வின்ஃபாஸ்டிற்கு கணிசமான கவனம் கிடைத்துள்ளது. இதனாலேயே குறுகிய காலத்திற்குள் 3வது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க வின்ஃபாஸ்ட் தயாராகி வருகிறது. விஎஃப் எம்பிவி 7 காரின் விலை இன்று நாம் எதிர்பார்க்கும் ரூ.18 லட்சத்திற்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டால், அதிக பேர் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2026, 5:26 [IST]
English summary
Vinfast vf mpv 7 electric car price will be announce today check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+