ஒரு கிமீ ஓட்ட வெறும் ரூ.1.50 மட்டுமே செலவு! நாடே எதிர்பார்த்த தமிழ்நாட்டு நிறுவனத்தின் 7 சீட்டர் கார் அறிமுகம்

இந்திய சந்தையில் மிக வேகமாக பிரபலமடைந்து வரும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் நுழைந்தது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) தூத்துக்குடி (Thoothukudi) பகுதியில் அமைந்துள்ளது.

தற்போதைய நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகும். இந்த வரிசையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் காரான வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 (VinFast VF MPV 7) இன்று (ஏப்ரல் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

VinFast VF MPV 7

இதன்படி சற்று நேரத்திற்கு முன்னர் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எம்பிவி ரக கார் ஆகும். எனவே வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 காரில் 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.

வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3 வரிசைகளிலும் ஏசி வெண்ட்கள், ஏர் ப்யூரிஃபையர், ஓடிஏ அப்டேட்கள், ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என 3 டிரைவிங் மோடுகள் என ஏகப்பட்ட வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

VinFast VF MPV 7

அத்துடன் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ், இபிடி மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரில், 60.1 kWh பேட்டரி (Battery) தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 517 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொலை தூர பயணங்களுக்கும் ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும்.

வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 201 பிஹெச்பி மற்றும் 280 என்எம் ஆக உள்ளது. அதே நேரத்தில் வெறும் 9 வினாடிகளுக்கு உள்ளாகவே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டும் திறனை வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 24.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 கருதப்படுகிறது.

முன்னதாக வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே தீவிரமாக நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகவோ 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரை புக்கிங் செய்து கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV), பிஒய்டி இமேக்ஸ் 7 (BYD eMax 7) போன்ற எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார்களுக்கு எல்லாம் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் கார் போட்டியாக இருக்கும். வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு எவ்வளவு செலவு ஆகும்? (Running Cost) என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் அதிகபட்சமாக ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 1.50 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இயக்குவதற்கு மிகவும் குறைவாக மட்டுமே செலவு ஆக கூடிய ஒரு 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன் ஆகும். ஆனால் மின்சார கட்டணம், காரை ஓட்டும் விதம் போன்ற அம்சங்களை எல்லாம் பொறுத்து, இயக்குவதற்கு ஆகும் செலவு மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2026, 14:15 [IST]
English summary
Vinfast vf mpv 7 launched in india price driving range safety features
மேலும்... #VinFast #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+