வின்ஃபாஸ்ட்டை பணிய வைத்த இந்தியர்கள்... MPV 7 எலெக்ட்ரிக் காரின் விலை ரூ.4 லட்சம் குறைப்பு!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு நிறுவனங்கள் புதிய விலை உத்திகளைக் கையாண்டு வருகின்றன. அந்த வகையில், வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது 7 சீட்டர் எம்பிவி காரான VF MPV 7 எலெக்ட்ரிக் காரின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், ஆரம்பத்தில் ரூ.24.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தடாலடியாக ரூ.4.10 லட்சம் குறைக்கப்பட்டு, ரூ.20.39 லட்சம் என்ற புதிய ஆரம்ப விலையில் கிடைக்கும். இதனால் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் கார் வாங்கும் திட்டத்தில் இந்த மாடல் முக்கியமான தேர்வாக மாறியுள்ளது.

Vinfast MPV 7

புதிய விலை விவரம்

இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டபோது 'ஒன் இந்தியா; ஒன் பிரைஸ்' என்ற முழக்கத்துடன் விற்பனைக்கு வந்தது. மஹிந்திரா XEV 9S உள்ளிட்ட கார்கள் சரியான விலையில் கிடைக்கும் நிலையில், அதிக விலை காரணமாக இந்த VF MPV7 கார் வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து நிறுவனம் விலையைக் குறைத்து, வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த புதிய விலை நிர்ணயம், இந்தியாவில் வளர்ந்து வரும் 7 இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் கார் சந்தையில் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும். குறிப்பாக, குடும்பப் பயன்பாட்டிற்கு அதிக இடவசதி கொண்ட மின்சார காரைத் தேடுபவர்களுக்கு இந்த விலைக் குறைப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

Also Read

போட்டியாளர்களுக்கு சவால்

புதிய விலையுடன் வின்ஃபாஸ்ட் VF MPV 7, மஹிந்திரா XEV 9S மற்றும் MG Tomahawk EV போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது. மஹிந்திரா XEV 9S ரூ.20.65 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், MG Tomahawk EV ரூ.19.49 லட்சம் விலையிலும் கிடைக்கின்றன. BYD eMax 7 காரின் விலை ரூ.27.90 லட்சமாக உள்ளது.
இதனால் VF MPV 7 காரானது போட்டியாளர்களுக்கு இணையான விலையில் 7 இருக்கைகள், அதிக பயண தூரம் மற்றும் குடும்பங்களுக்கான நடைமுறை வசதிகளை வழங்கும் காராக முன்னிலைப்படுத்தும் முயற்சியில் வின்ஃபாஸ்ட் இறங்கி உள்ளது.

VF MPV 7

பேட்டரி, ரேஞ்ச் மற்றும் செயல்திறன்

இந்த எலெக்ட்ரிக் காரில் 60.13 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. முழுமையான சார்ஜில் 517 கி.மீ வரை பயணிக்கலாம் என நிறுவனம் தெரிவிக்கிறது. முன்புறத்தில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் 204 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. பூஜ்ய நிலையில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை 9 வினாடிகளுக்குள் எட்டும் திறன் கொண்டது. டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.

Also Read

குடும்பங்களுக்கான இடவசதி

VF MPV 7 காரின் நீளம் 4,740 மிமீ ஆகவும், வீல்பேஸ் 2,840 மிமீ ஆகவும் உள்ளது. மூன்று வரிசைகளைக் கொண்ட இருக்கை அமைப்பில் ஏழு பேர் பயணிக்க முடியும். அனைத்து இருக்கைகளும் பயன்படுத்தப்படும் நிலையில் 126 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. இருக்கைகளை மடக்கும்போது இது 1,240 லிட்டராக அதிகரிக்கிறது. காரின் உட்புறத்தில் 10.1 அங்குல தொடுதிரை, இரண்டு விதமான இன்டீரியர் தேர்வுகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நீண்ட தூர குடும்பப் பயணங்களுக்கும், நகர்ப்புற பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனையை அதிகரிக்குமா?

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வின்ஃபாஸ்ட் VF MPV 7 மொத்தம் 520 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அந்நிறுவனத்தின் இந்திய விற்பனையில் இது 3.91 சதவீதமாகும். இந்நிலையில், ரூ.4.10 லட்சம் விலைக் குறைப்பு மூலமாக தனிநபர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், ரூ.20.39 லட்சம் புதிய விலையில் வின்ஃபாஸ்ட் VF MPV 7, அதிக இடவசதி, நீண்ட ரேஞ்ச் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் குடும்ப காரை விரும்புவோருக்கு புதிய வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.

Article Published On: Wednesday, November 4, 2026, 11:51 [IST]
English summary
Vinfast vf mpv 7 price cut rs 4 10 lakh new price range features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out