ஒரு கிமீ ஓட்ட 1 ரூபா மட்டுமே செலவு! 7 பேர் போகலாம்! இந்தியாவையே மிரள விட போகும் தமிழ்நாட்டு நிறுவனம்!

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், தமிழகத்தின் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைத்து, எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் மூன்றாவதாக ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

VinFast VF MPV 7

அந்த தகவலை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆம், இந்தியாவில் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் காரின் டீசர் புகைப்படம் (Teaser Image), வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டீசர் புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது, அது எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) ரகத்தை சேர்ந்தது என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடிகிறது. எனவே சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 (Vinfast VF MPV 7) மற்றும் வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் (Vinfast Limo Green) ஆகிய கார்களைதான், வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Carens Clavis EV Side Design

இவை இரண்டுமே எலெக்ட்ரிக் எம்பிவி ரகத்தை சேர்ந்த ஒரே கார்கள்தான். பெயர்கள் மட்டும்தான் வெவ்வேறு. அதாவது வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 மற்றும் வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் ஆகிய 2 கார்களுக்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. அளவு, 7 இருக்கைகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஆனால் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரானது, தனி நபர் பயன்பாட்டிற்கானது. எனவே அதில் வசதிகள் அதிகம். ஆனால் லிமோ க்ரீன் எலெக்ட்ரிக் காரானது, வணிக பயன்பாட்டிற்கானது. எனவே அதில் வசதிகள் குறைவு. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் இவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இவை இரண்டையுமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய போகிறதா? அல்லது விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரை மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய போகிறதா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரை களமிறக்கினால், அதில் 60.13 kWh பேட்டரி (Battery) தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 450 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் பேட்டரி 80 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் ஆகும். இதன் மூலம் வெறும் 30 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்து விட முடியும்.

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் உடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகளையும் (Features), இந்த எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அதன் ஆரம்ப விலை 18 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படும் என நாங்கள் கருதுகிறோம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Expected Price) ஆகும். இதன் மூலம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் காருக்கு, இது நேரடி போட்டியாக இருக்கும்.

அதே நேரத்தில் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1 ரூபாய் (Running Cost) மட்டுமே செலவு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய அதே நேரத்தில் இயக்குவதற்கும் குறைவான செலவு மட்டுமே ஆக கூடிய ஒரு காரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 1, 2026, 11:42 [IST]
English summary
Vinfast vf mpv 7 teaser india launch soon expected price range features and more
மேலும்... #VinFast #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+