வெறும் 5 லட்சம் ரூபாய் விலையில் வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் கார்.. ஷோரூம்ல கூட்டம் குமிய போகுது

எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தொடக்கத்திலேயே அவை அதிக விலையைக் கொண்டிருப்பதால், அதே விலையில் கூடுதல் விலை கொண்ட எரிபொருள் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்று விடுகிறார்கள். இந்த காரணத்தினாலேயே எரிபொருள் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை இந்தியாவில் மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இதனால் பல்வேறு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் காரை வெளியிட முயற்சி செய்து வருகின்றன.

அப்படி இந்தியாவில் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் ஒன்றை வெளியிட விரும்பும் நிறுவனங்களில் ஒன்றா வின்ஃபாஸ்ட் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் வின்ஃபாஸ்ட். கடந்த ஆண்டு தான் VF6 மற்றும் VF7 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார் வெளியீடுகள் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கால் பதித்தது இந்த நிறுவனம்.

Vinfast VF3

இந்த நிறுவனம் இந்தியாவில் புதிதாக விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த 2026ம் ஆண்டு கூட இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். அது வேறெதுவும் இல்லை, வெளிநாடுகளில் அந்நிறுனம் விற்பனை செய்து வரும் VF3 என்ற எலெக்ட்ரிக் கார் தான்.

வின்ஃபாஸ்டின் மிகவும் விலை குறைவான தொடக்கநிலை எலெக்ட்ரிக் காராக VF3 இருக்கிறது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எம்ஜி காமெட்டுக்கு இணையான அல்லது போட்டியான காராக இந்த VF3-யை கூற முடியாது. காமெட்டைப் போலவே இந்த VF3-யும் மூன்று டோர்களைக் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் கார் தான். பெரியளவில் இல்லையென்றாலும் நகர வாடிக்கையாளர்களிடையே காமெட்டுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே VF3 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வின்ஃபாஸ்ட் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vinfast VF3 EV

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் கார்களுக்கு BaaS திட்டத்தையும் அளித்து வருகிறது வின்ஃபாஸ்ட். அதேபோல் VF3 காரையும் BaaS திட்டத்துடன் இந்தியாவில் வெளியிடும் பட்சத்தில் மிகவும் குறைவாக 5 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலைக்கே விற்பனை செய்ய செய்ய முடியும். இதற்கு போட்டியாக இருக்கும் எம்ஜி காமெட் EV-யும் BaaS திட்டத்துடன் 5 லட்சம் ரூபாயை ஒட்டிய தொடக்க விலையிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

BaaS என்பது Battery as a Service என்பதன் சுருக்கம் தான். இந்தத் திட்டத்தின் கீழ் பேட்டரிக்கான கட்டணம் தொடக்க விலையில் சேர்க்கப்பட்டிருக்காது. மாறாக பேட்டரிக்கான கட்டணத்தை பயன்பாட்டு அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நாம் செலுத்த வேண்டியிருக்கும். எலெக்ட்ரிக் காரின் தொடக்க விலையைக் குறைப்பதற்காக இந்தத் திட்டத்தை எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

VF3 எலெக்ட்ரிக் காரில் 18.6 kWh பேட்டரி பேக் மற்றும் 43.5 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை வின்ஃபாஸ்ட் கொடுத்திருக்கிறது. இந்த செட்டப்புடன் 215 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த அர்பன் எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கிறது. நகரப் பயன்பாட்டிற்கு மட்டும் ஏற்ற சிறப்பான காராக இது இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: VF3 இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தாலும், இந்தக் காரை இந்தியாவில் வெளியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. எனினும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்து மட்டுமே வருகின்றன. நகர வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான ஒரு சிறிய ரக எலெக்ட்ரிக் காராக இந்த வின்ஃபாஸ்ட் VF3 இருக்கும்.

Article Published On: Friday, May 22, 2026, 13:26 [IST]
English summary
Vinfast vf3 may launch in india as low price electric car to rival mg comet ev
மேலும்... #VinFast #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+