குறைவான பட்ஜெட் வின்ஃபாஸ்ட் EV கார் இந்தியாவில் சோதனை... டாடா பன்ச் காருக்கு போட்டி!!

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் வர்த்தக விரிவாக்கத் திட்டத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. தற்போது VF6 மற்றும் VF7 ஆகிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் அந்நிறுவனம் அடுத்து VF5 என்ற பெயரில் குறிப்பிடப்படும் குட்டி எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்து வருகிறது.

அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் அந்நிறுவனத்தின் குறைவான விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்பதால் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் தற்போது விற்பனையில் சிறப்பாக இருந்து வரும் டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Vinfast VF5

வடிவமைப்பு

சர்வதேசச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வின்ஃபாஸ்ட் VF5 கார் 3,967 மிமீ நீளமும், 1,723 மிமீ அகலமும், 1,579 மிமீ உயரமும் கொண்டதாக உள்ளது. இதன் வீல்பேஸ் 2,514 மிமீ நீளமாகவும் உள்ளது. மேலும், 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 260 லிட்டர் பூட் ஸ்பேஸ் இதில் வழங்கப்படுகிறது. நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த கார், நகர்ப்புறப் பயன்பாட்டுக்கு ஏற்ற சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வகையில் இடம்பெறும்.

இந்தியாவில் சோதனை செய்யப்படும் VF5 காரில் முன்பக்க வடிவமைப்பு மற்றும் பின்புற விளக்குகளில் மாற்றங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது. உலக சந்தையில் உள்ள மாடலுடன் ஒப்பிடும்போது, இந்தியாவுக்கான காரில் சில வடிவமைப்பு மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

பேட்டரி, மோட்டார் மற்றும் ரேஞ்ச்

சர்வதேச சந்தைகளில் வின்ஃபாஸ்ட் VF5 கார் வெவ்வேறு பேட்டரி மற்றும் மோட்டார் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. சில சந்தைகளில் 29.6 kWh பேட்டரியுடன் 95 எச்பி திறனை வெளிப்படுத்தும் மின்மோட்டார் வழங்கப்படுகிறது. சில சந்தைகளில் 37.23 kWh பேட்டரியுடன் 136 எச்பி திறன் கொண்ட மின்மோட்டார் இடம்பெறுகிறது. சிறிய பேட்டரி தேர்வில் 268 கி.மீ., ரேஞ்ச் வரையிலும், பெரிய பேட்டரி தேர்வில் 326 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது சர்வதேச மாடல்களின் NEDC சோதனைத் தரவுகள் அடிப்படயிலான ரேஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா பன்ச் EV, டியாகோ EV கார்களுக்கு போட்டி?

வின்ஃபாஸ்ட் VF5 காரின் விலை மற்றும் பேட்டரி தேர்வைப் பொறுத்து, இந்தியாவில் டாடா பன்ச் EV மற்றும் டாடா டியாகோ EV ஆகிய கார்களுடன் போட்டியிடலாம். சிறிய எலெக்ட்ரிக் காரைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது மற்றொரு தேர்வாக அமையும். குறிப்பாக, நகரப் பயணம், அலுவலகப் பயன்பாடு மற்றும் குடும்பத்தின் இரண்டாவது காராக வாங்க விரும்புபவர்களை இலக்காக கொண்டு களமிறக்கப்படும். இந்தியாவில் VF5 காரின் விலை ரூ.12 லட்சம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்,

மேட் இன் இந்தியா கார்

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள தனது ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை அசெம்பிள் செய்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உதிரி பாகங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும், சவாலான விலையில் கார்களை விற்பனை செய்வதற்கும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எனவே, இந்த காரும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே வலுவான வளர்ச்சியை பெற்று வருகின்றன. இந்தச் சூழலில், வின்ஃபாஸ்ட் நிறுவனமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய VF5 கார் வந்தால் நிச்சயம் அந்த நிறுவனத்தின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றம் பெறும். இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக ஒரு சிறப்பான பட்ஜெட் எலெக்ட்ரிக் கார் தேர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

Article Published On: Wednesday, October 28, 2026, 10:28 [IST]
English summary
Vinfast vf5 electric car spied testing india launch expected price range
மேலும்... #VinFast
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out