புதிய வின்ஃபாஸ்ட் VF5 எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்: டாடா நெக்ஸான் EVக்கு போட்டி!

இந்திய மின்சார கார் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக வெளிநாட்டு நிறுவனங்களும் புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது புதிய மாடலை விரைவில் கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே இரண்டு எலெக்ட்ரிக் கார்களுடன் சிறப்பான வர்த்தகத்தை தொடங்கியுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம், தற்போது புதுப்பிக்கப்பட்ட VF5 மின்சார எஸ்யூவி காரை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இதற்கான வடிவமைப்பு காப்புரிமை இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை ஓட்டமும் நடைபெற்று வருவது குறித்த ஸ்பை படங்களும் வெளியாகி வருகின்றன.

Vinfast VF5

தற்போதைய VF5 மாடலுடன் ஒப்பிடும்போது புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்பக்க விளக்குகள் மெல்லிய வடிவமைப்பைப் பெற்றுள்ளன. பம்பரின் இருபுறங்களிலும் கீழ்ப்பகுதியில் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் காரின் முன்புறத் தோற்றம் மேலும் நவீனமாக மாறியுள்ளது.

முன்பக்க பம்பரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. விளக்குகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருப்பு நிற அலங்காரப் பகுதிகளின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், காரின் முன்பகுதி பானட் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பழைய மாடலைவிட புதிய கார் முழுமையான எஸ்யூவி தோற்றத்தைப் பெற்றுள்ளது.

Also Read

காரின் பக்கவாட்டு வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது. இருப்பினும், புதிய அலாய் வீல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. வியட்நாமில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களின்படி, இதில் 16 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்படலாம். மற்ற பக்கவாட்டு வடிவமைப்புகள் தற்போதைய மாடலைப் போலவே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்புறத்தில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிய எல்இடி டெயில் விளக்குகள் தடிமனான வடிவமைப்பைப் பெற்றுள்ளன. இவை நடுவில் வழங்கப்படும் ஒளிப்பட்டையால் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மையப்பகுதியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் லோகோ இடம்பெற வாய்ப்புள்ளது.

Vinfast VF5

புதிய VF5 காரின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடல் 3,967 மிமீ நீளமும், 1,723 மிமீ அகலமும், 1,580 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2,514 மிமீ நீளமுடையதாக இருக்கும்.

வெளிப்புற வடிவமைப்பு மட்டுமின்றி, காரின் உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, புதிய டேஷ்போர்டு அமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய சிறிய திரைக்குப் பதிலாக, பெரிய அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் வசதி இடம்பெற வாய்ப்புள்ளது.

Also Read

இதன் ஸ்டீயரிங் வீலும் புதிய இரண்டு ஸ்போக் வடிவமைப்பைப் பெறலாம். ஓட்டுனருக்கான தகவல் திரை, மையத் தொடுதிரையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பில் வழங்கப்படலாம். மேலும், சென்டர் கன்சோலில் ரோட்டரி கியரும் மற்றும் இரண்டு கப் ஹோல்டர்கள் இடம்பெறலாம். உட்புறத்தில் கருப்பு நிறத்திலான அலங்காரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகளில் வின்ஃபாஸ்ட் VF5 கார் வெவ்வேறு பேட்டரி வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படும் மாடலில் 29.6 kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் 90 எச்பி பவரையும் 135 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

இந்த மாடல் முழுமையான சார்ஜில் 268 கிமீ வரை பயணிக்கும் என என்இடிசி சான்றளிப்பு அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சர்வதேச சந்தைகளில் 37.23 kWh பேட்டரி வசதியும் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி கொண்ட மாடல் 326 கிமீ ரேஞ்ச் வழங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் VF5 காரில் எந்த பேட்டரி வசதி வழங்கப்படும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் முக்கியமாக டாடா நெக்ஸான் EV காருக்கு போட்டியாக இருக்கும். நெக்ஸான் EV தற்போது 30 kWh மற்றும் 45 kWh என இரண்டு பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. அத்துடன் டாடா பன்ச் கார் மார்க்கெட்டையும் குறிவைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Article Published On: Wednesday, November 11, 2026, 13:49 [IST]
English summary
Vinfast vf5 facelift india launch price range features
மேலும்... #VinFast
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out