626 கிமீ ரேஞ்ச், 5 மீட்டர் நீளம்... புதிய பிரிமீயம் எஸ்யூவிக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்ற வின்ஃபாஸ்ட்!

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார் வரிசையை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. தற்போது VF6, VF7 மற்றும் VF MPV 7 ஆகிய மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்து சிறிய வகை எலெக்ட்ரிக் காரையும், பிரிமீயம் ரகத்திலான மிகப்பெரிய எஸ்யூவி மாடலையும் அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், 5 மீட்டர் நீளம் கொண்ட VF9 என்ற புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றுள்ளது வின்ஃபாஸ்ட் நிறுவனம்.

Vinfast VF 9

இந்த புதிய VF 9 எஸ்யூவி எலெக்ட்ரிக் காரை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து வின்ஃபாஸ்ட் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு காப்புரிமை பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், VF 9 இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து வின்ஃபாஸ்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், விரைவில் இந்திய சந்தையில் இந்த புதிய மாடல் வருவதற்கான முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட எஸ்யூவி

புதிய வின்ஃபாஸ்ட் VF 9 எலெக்ட்ரிக் கார் 5.1 மீட்டர் நீளம் கொண்ட முழு அளவிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டுச் சந்தைகளில் இது 6 மற்றும் 7 இருக்கை வசதி கொண்டதாக கிடைக்கிறது. நீளமான வீல்பேஸ் மற்றும் மூன்று வரிசை கேபின் காரணமாக குடும்ப பயன்பாட்டை மையமாகக் கொண்ட பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Vinfast VF 9

இந்த காரின் உட்புறத்தில் 15.6 அங்கு தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், அலெக்ஸா அடிப்படையிலான வாய்ஸ் அசிஸ்டென்ட், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அடாஸ் போன்ற வசதிகள் இருக்கின்றன.

ரேஞ்ச்

வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள இந்த பிரம்மாண்ட எஸ்யூவியில் 123kWh பேட்டரியுடன் இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இவை இணைந்து 402எச்பி பவரையும் மற்றும் 620என்எம் டார்க்கையும் வழங்குகின்றன. ஆல் வீல் டிரைவ் அமைப்புடன் வரும் இந்த எஸ்யூவி, குறிப்பிட்ட சந்தை/சோதனை முறையைப் பொறுத்து 626 கி.மீ வரை ரேஞ்ச் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டால், மூன்று வரிசை எலெக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் இது பிரிமீயம் மாடலாக இருக்கும். குறிப்பாக, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய எலெக்ட்ரிக் கார் சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் அடுத்த முக்கிய மாடலாகவும் இருக்கும்.

Article Published On: Tuesday, September 8, 2026, 10:42 [IST]
English summary
Vinfast vf9 premium electric suv india design patent filing details
மேலும்... #VinFast #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out