தூத்துக்குடியில் ரூ.4704 கோடி செலவு செய்தது வீணா போகாது! தமிழ்நாட்டை நம்பி வந்தவங்க தோற்றுபோனதா சரித்தரமே இல்ல

வின்ஃபாஸ்ட் (VinFast), வியட்நாம் நாட்டை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம். இந்தியாவில் கடந்த காலங்களில் இருந்து பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. ஆனால் அவற்றுள் ஒன்றாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை நாம் கருத முடியாது. ஏனென்றால், வியட்நாம் நாட்டில் ஸ்கூட்டர், பைக், கார் உள்பட பேருந்து, லாரிகள் போன்ற கமர்ஷியல் வாகனங்களையும் உற்பத்தி செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக வின்ஃபாஸ்ட் விளங்குகிறது.

இதனாலேயே, கடந்த 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியின் வாயிலாக வின்ஃபாஸ்ட் இந்தியாவில் நுழைந்ததும் மொத்த இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டும் அதிர்ந்து போனது. வின்ஃபாஸ்டின் எலெக்ட்ரிக் கார்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவ்வாறு அறிமுகம் செய்யப்பட உள்ள எலெக்ட்ரிக் கார்கள் பொது வெளியில் சோதனை செய்யப்படுவதற்காக கொண்டுவரப்படும்போது அவற்றை பார்த்து மக்கள் ஆச்சிரியப்படுவதும், அவற்றின் தோற்றத்தை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதையும் பார்க்க முடிகிறது.

vinfast s long-term strategy in india

இவ்வாறு குறுகிய காலத்தில் இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையை வியட்நாம் நாட்டிற்கே சென்று நாங்கள் பார்வையிட்டோம். நமது டிரைவ்ஸ்பார்க் (DriveSpark) குழுவின் ரிவியூ எடிட்டர் புரோமித் கோஷ் மற்றும் நமது சகோதர பத்திரிக்கை வெளியீடான கிஸ்பாட் (Gizbot)-இன் டெக் கிரியேட்டர் மற்றும் ரிவியூ குழு தலைவரான ராபின் ஜான் அவர்களும் பல எதிர்பார்ப்புகளுடன் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடியிலும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அசெம்பிள் (Assemble) தொழிற்சாலை உள்ளது என்றாலும், வியட்நாம் போன்ற சிறிய நாட்டில் இருந்து உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவனமாக வின்ஃபாஸ்ட் வளர்ந்ததற்கு காரணமான ஹாய் போங் (Hai Phong) தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டது உண்மையில் வித்தியாசமான தருணம் ஆகும். தொழிற்சாலையின் கிரவுண்ட்-லெவலில் இருந்து பார்வையிட்டோம்.

vinfast s long-term strategy in india

ஹாய் போங் தொழிற்சாலைக்குள் நடந்து சென்றபோது, முற்றிலுமாக அனுபவமிக்க உற்பத்தி தொழிற்சாலை சூழலுக்குள் நுழைந்த அனுபவம் கிடைத்ததாக பரவசத்துடன் புரோமித் தெரிவிக்கிறார். மொத்தம் 1,200 ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வின்ஃபாஸ்டின் இந்த தொழிற்சாலையில் அதிகளவில் ரோபோட்கள் மூலம் பணிகள், மிகவும் உயர்தரத்திலான ஆட்டோமேட்டிக் பணிகளாக மேற்கொள்ளப்படுகின்றன.

உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) நேர்த்தியாக தொழிற்சாலையில் இருந்து வெளியே கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு ஆச்சிரியத்துடன் தொழிற்சாலையை பார்வையிட்டு கொண்டிருந்த போது, ராபின் ஜான் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது, "வின்ஃபாஸ்ட்டை பொறுத்தவரையில் இந்தியா ஆனது ஒத்திகை பார்ப்பதற்கான சந்தையா? அல்லது நீண்ட காலத்திற்கான சந்தையா?" என நம்மில் பெரும்பாலானோருக்கு எழும்பும் கேள்வியாக அது இருந்தது.

இதற்கு புரோமித் கோஷின் பதில் வின்க்ரூப் (Vingroup)-ஐ மையமாக கொண்டே இருந்தது. ஏனெனில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வின்க்ரூப் ஆனது ரியல் எஸ்டேட் (Real Estate), தொழிற்நுட்பம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் கால்பதித்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாகவே, ஹாய் போங் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஆராய்ச்சி மையம், பேட்டரி மேம்பாட்டு மையம், தயாரிப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு மையம் என அனைத்தையும் ஒரே இடத்தில் வின்க்ரூப் ஆல் அமைக்க முடிந்துள்ளது.

இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால், ஹாய் போங் தொழிற்சாலையை வெறும் 21 மாதங்களில் வின்க்ரூப் கட்டியெழுப்பி உள்ளது. இத்தகைய வின்ஃபாஸ்ட் நிறுவனம் தான் நமது தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைத்து செயல்பட துவங்கியுள்ளது என நினைக்கும்போது ஆச்சிரியமாக உள்ளது. இந்த தூத்துக்குடி தொழிற்சாலைக்காக 50 கோடி டாலர்களை (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.4,704 கோடி) வின்க்ரூப் செலவு செய்துள்ளது.

vinfast s long-term strategy in india

தற்போதைக்கு வருடத்திற்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக இருந்தாலும், வரும் வருடங்களில் வருடத்திற்கு 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடியதாக தூத்துக்குடி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை மூன்று மடங்கு அதிகரிக்க வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், வின்ஃபாஸ்டின் தூத்துக்குடி தொழிற்சாலை ஆனது தற்போதைக்கு அசெம்பிள் தொழிற்சாலையாகவே உள்ளது.

அதாவது, வாகனத்தின் பாகங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு முழு வாகனமாக அசெம்பிள் செய்யப்படுகின்றன. தூத்துக்குடி தொழிற்சாலையை முக்கியமாக இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மற்றும் எலெக்ட்ரிக் பேருந்துகளை உற்பத்தி செய்ய வின்ஃபாஸ்ட் பயன்படுத்துகிறது. இதற்கிடையில், தெலுங்கானாவில் நகர்புற மேம்பாட்டு பணிகளுக்காகவும், எலெக்ட்ரிக் மொபைலிட்டி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மருத்துவம், கல்வி, சுற்றுலா மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றிற்காகவும் வின்க்ரூப் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.

மேலும், இந்த திட்டத்தில் எலெக்ட்ரிக் டாக்சி சேவைகள் மற்றும் மொபிலிட்டி-அஸ்-அ-சர்வீஸ் பிளாட்ஃபார்ம் உள்ளிட்டவற்றிற்கும் வின்க்ரூப் திட்டமிட்டுள்ளது. இதற்காக, வின்க்ரூப்பில் அங்கம் வகிக்கும் க்ரீன் (Green) மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி (Smart Mobility) நிறுவனங்கள் இந்தியாவில் நுழைகின்றன. ஏற்கனவே கூறியதுபோல், உலகளவில் எலெக்ட்ரிக் 2-வீலர்களில் இருந்து கனரக பேருந்துகள் மற்றும் லாரிகள் வரையில் வின்ஃபாஸ்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

இந்தியாவில் விஎஃப்6 (VF6) மற்றும் விஎஃப்7 என்கிற இரு எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார்கள் மூலம் வின்ஃபாஸ்ட் தனது பயணத்தை துவங்கியுள்ளது. இந்திய மக்கள் புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால் அதேநேரம், ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட டிசைன், பாதுகாப்பு, செயல்படுதிறன் மற்றும் ஆஃப்டர்-சேல்ஸ் (After-sales) சர்வீஸை பெறவே விரும்புகின்றனர். இதற்கு, வின்ஃபாஸ்டின் பிரபலமான விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றவையாக இருக்கும். இதைதான் புரோமித் கோஷ் அவர்களும் தெரிவிக்கிறார்.

இந்த இரு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களிலும் லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி பேக் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 510கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடிய இந்த பேட்டரி தொகுப்பை 100 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம். இதன் மூலமாக, 10%-இல் இருந்து 70% சார்ஜை வெறும் 25 நிமிடங்களில் நிரப்பிவிட முடியும்.

மேலும், விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலெக்ட்ரிக் கார்களில் லெவல்-2 அடாஸ் (ADAS), கனெக்டட் தொழிற்நுட்பம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட், இண்டெலிஜென்ட் பேட்டரி மேனேஜ்மெண்ட் மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட் திறன் உள்ளிட்டவற்றையும் வின்ஃபாஸ்ட் வழங்குகிறது. தற்போதைக்கு 45 டீலர்ஷிப் ஷோரூம்களை இந்தியாவில் கொண்டிருக்கும் வின்ஃபாஸ்ட் விரைவில் அதனை 75 ஆக அதிகரிக்கும் முனைப்பில் உள்ளது.

இதற்காக, காஸ்ட்ரல், மை டிவிஎஸ் மற்றும் ரோடு க்ரிப் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் உடன் வின்ஃபாஸ்ட் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்தியாவில் வரும் நாட்களில் மேலும் பல கார்கள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் பேருந்துகள் மூலம் அதன் தயாரிப்புகள் வரிசையை வின்ஃபாஸ்ட் விரிவுப்படுத்த உள்ளது. இது புரோமித்தின் ஹாய் போங் தொழிற்சாலை பார்வையிடலின் போது உறுதிப்படுத்தப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலேயே வாகனங்களை உற்பத்தி செய்வது, வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு பெரிய பலம் ஆகும். இதனை புரிந்துக்கொண்டு இன்னும் பெரிய உற்பத்தி முதலீடுகளை மேற்கொள்ளவும், நீண்ட காலத்திற்கான சூழலை இந்தியாவில் உருவாக்கவும் வின்க்ரூப் வாயிலாக வின்ஃபாஸ்ட் தயாராகி வருகிறது. குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் வின்ஃபாஸ்ட் அதிக முனைப்பு காட்ட உள்ளது. இதனால், இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 26, 2026, 11:27 [IST]
English summary
Vinfasts long term strategy in india building an ev ecosystem check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X