மிடில்-க்ளாஸ் மக்களின் சொகுசு கார்! தொடங்கியது டெலிவரி! அவ்ளோ பெரிய ஆளே வாங்கீட்டாரா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் நேற்று (ஜனவரி 14) தொடங்கின. அத்துடன் இந்த காரின் டெலிவரி (Delivery) பணிகளும் நேற்று முதலே தொடங்கப்பட்டு விட்டன.

இது மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார் என்பதால், பலரும் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் டெலிவரி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக மஹிந்திரா நிறுவனத்தின் கார்களை, பிரபலங்களும் போட்டி போட்டு கொண்டு வாங்குவது வழக்கம்.

Vinod Sahay Buys Mahindra XUV 7XO

இந்த வரிசையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை முதல் ஆளாக பிரபலம் ஒருவர் டெலிவரி எடுத்துள்ளார். அவர் வினோத் சாஹே (Vinod Sahay) ஆவார். மஹிந்திரா குழுமத்தின் ஏரோஸ்பேஸ் & பாதுகாப்பு, லாரிகள், பஸ்கள் மற்றும் கட்டுமான உபகரணங்கள் பிரிவுகளை இவர்தான் தலைமையேற்று நிர்வகித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவர் மஹிந்திரா நிறுவனம் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும்போதெல்லாம், அதை வாங்கி விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9E) காரையும், வினோத் சாஹே வாங்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுதான் அவரது முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பதும் கவனிக்கத்தக்கது.

Mahindra XUV 7XO

சரி, அவர் தற்போது வாங்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காருக்கு வருவோம். இந்த காருடன் சேர்த்து, மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) எலெக்ட்ரிக் காருக்கும், நேற்றுதான் முன்பதிவு தொடங்கியது. இந்த 2 கார்களுக்கும் வெறும் 4 மணி நேரத்திலேயே ஒட்டுமொத்தமாக 93 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்து விட்டன.

இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை பொறுத்தவரையில், அது ஏற்கனவே விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஆகும். இந்த காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களையும் இந்த கார் கொண்டுள்ளது.

மறுபக்கம் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 12.3 இன்ச் அளவில் முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக ஒரு திரை என இந்த காரின் டேஷ்போர்டில், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் ஆகிய கார்களை போலவே, ட்ரிபிள் ஸ்க்ரீன் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் லெவல் 2 அடாஸ், 540 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப், டால்பி அட்மாஸ் உடன் 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரில் வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை வெறும் 13.66 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கருதப்படுகிறது. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை போலவே, அதன் வாரிசான மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரும், விற்பனையில் சாதனைகளை படைக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 15, 2026, 13:36 [IST]
English summary
Vinod sahay buys mahindra xuv 7xo check all details here
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+