திடீரென இந்த காரை நிறுத்திய நிறுவனம்! என்ன காரணம் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது விர்டுஸ் மற்றும் டைகுன் ஆகிய கார்களில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் ஆப்ஷன் கொண்ட வேரியண்டை தற்போதைய விற்பனையிலிருந்து நீக்கி உள்ளது. இதற்கான காரணம் என்ன இந்த ஆப்ஷன் கொண்ட கார் ஏன் நிறுத்தப்பட்டது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது விர்டுஸ் மற்றும் டைகுன் ஆகிய கார்களில் உள்ள இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி இந்த இரண்டு கார்களிலும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் தற்போது விற்பனையிலிருந்து நிறுத்தி உள்ளது. இதனால் இந்த 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இனி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மட்டுமே இந்திய மார்க்கெட்டில் விற்பனை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Volkswagen 1 5L MT Trims Discontinued

இதற்கு முன்னர் வரை மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் ஒரு ஆப்ஷனாக இருந்து நிலையை தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. இதனால் இனி மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் 1.0 லிட்டர் 3. பெட்ரோல் இன்ஜினை தான் தேர்வு செய்ய வேண்டும் அதில் மட்டுமே தற்போது மேனுவல் கியர் ஆப்ஷன் இருக்கிறது. அந்த இன்ஜின் 110 பி எஸ் பவர் மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கியர் பாக்ஸ் ஆப்ஷன்களிலும் இருக்கிறது.

தற்போது விற்பனையில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெர்பார்மன்ஸ் எந்த வித மாற்றமும் இல்லை அதை 150 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாக இன்ஜினாக இருக்கிறது. தற்போது இது ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் உடன் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

Volkswagen 1 5L MT Trims Discontinued

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை பொருத்தவரை ஸ்கோடா பிராண்டுடன் தனது தொழிற்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் நிலையில் ஆகிய கார்களும் இந்த கார்கள் தயாரிக்கப்படும் அதே பிளாட்பார்மிங் தயாரிக்கப்படுகிறது. அதிலும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. அந்த கார்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் ஸ்கோடா நிறுவனம் தனது குஷாக் காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட தற்போது திட்டமிட்டு அதற்கான டீசர்களை வெளியிட்டுள்ளது.

Volkswagen 1 5L MT Trims Discontinued

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட வாகனங்களை அதிகம் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். எதிர்காலத்தில் இந்த ரக கியர் பாக்ஸில் அதிகம் விற்பனையாக நிலையில் இதில் முதல் படியாக மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் குறிப்பிட்ட இன்ஜின் வகையில் நீக்கி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவிற்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனை ஆகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Sunday, January 18, 2026, 17:05 [IST]
English summary
Volkswagen 15l mt trims discontinued virtus taigun india
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X