455 கிமீ ரேஞ்சுடன் ஃபோக்ஸ்வாகன் ID போலோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட காராக இருந்து வருகிறது ஃபோக்ஸ்வாகனின் போலோ ஹேட்ச்பேக். தற்போது இதன் முதல் எலெக்ட்ரிக் வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். 'ID போலோ' என்ற பெயரில் இந்தப் புதிய ஹேட்ச்பேக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். 2010ம் ஆண்டு தொடங்கி 2022ம் ஆண்டு வரை இந்தியாவில் போலோ ஹேட்ச்பேக் மாடலை ஃபோக்ஸ்வாகன் விற்பனை செய்து வந்தது.

பேட்டரி பேக், ரேஞ்சு மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்:

MEB+ EV பிளாட்ஃபார்மை இந்த ID போலோ எலெக்ட்ரிக் காருக்குப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். 37 kWh LFP மற்றும் 52 kWh NMC என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. சிறிய பேட்டரி பேக்கானது 329 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக்குடன், 116 hp அல்லது 135 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகளை ஃபோக்ஸ்வாகன் கொடுக்கிறது.

Volkwagen ID Polo EV

இந்த 37 kWh சிறிய பேட்டரி பேக்கானது 90 kW வரையிலான DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை 10-80% வரை 27 நிமிடங்களில் அதிவேகமாக சார்ஜ் செய்ய முடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இரண்டாவதாக 52 kWh பேட்டரி பேக். இந்த பெரிய பேட்டரி பேக்குடன் 211 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெரிய பேட்டரி பேக்கானது 455 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. 105 kW வரையிலான DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கும் இந்த பெரிய பேட்டரி பேக்கை 10-80% வரை 24 நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும் என ஃபோக்ஸ்வாகன் தெரிவித்துள்ளது. இந்த ஸ்டாண்டர்டு மாடல்கள் இல்லாமல், ID போலோ GTI மாடலையும் வெளியிட அந்நிறுவனம் திட்டங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Volkswagen ID Polo Electric car

வெளிப்புறத் தோற்றம்:

தோற்றத்தில் 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ID.2all கான்செப்ட் மாடலைப் போலவே இருக்கிறது புதிய ID போலோ எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல். இந்தக் காரின் முகப்பில் காரின் முழு அகலத்திற்கும் நீளும் வகையிலான முகப்பு விளக்கு செட்டப் கொடுக்கப்பட்டிருப்பதோடு, கண் இமைகள் போலான வடிவில் LED DRL-கள் கொடுக்கப்பட்டுள்ளன. LED முகப்பு விளக்கு செட்டப்பிற்கு நடுவில் ஃபோக்ஸ்வாகன் லோகோ இடம்பெற்றுள்ளது.

எலெக்ட்ரிக் கார் என்பதால் முழுவதும் ஃபிளாட்டாக மற்றும் ஸ்மூத்தான டிசைனைக் கொடுக்கலாம், எரிபொருள் கார்கள் போலான டிசைனில் பாதியை இந்த எலெக்ட்ரிக் காரில் கொடுத்துள்ளது ஃபோக்ஸ்வாகன். பம்பர், ஏர் டேம் மற்றும் ஃப்ரண்ட் ஸ்பிளிட்டர் ஆகியவை நீட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டிலும் பிளாட்டான ஷீட்களைக் கொடுக்காமல், ஏற்ற இறக்கங்களைக் காட்டியிருக்கிறது அந்நிறுவனம். இது காருக்கு சற்று ஸ்போர்ட்டியான லுக்கையும் கொடுக்கிறது.

இத்துடன் பக்கவாட்டில் 19 இன்ச் வரையிலான அளவில் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கம், காரை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் வகையில் தோற்றமளிக்கக்கூடிய பின்பக்க விளக்கு செட்டப், காரின் அகலத்திற்கு நீளும் லைட் பாருடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது காருக்கு மினிமலிஸ்டிக்கான, அதே நேரம் ஸ்டைலான தோற்றத்தை வழங்குகிறது. முன்பக்கத்தைப் போலவே பின்பக்கமும் லைட் பாருக்கு நடுவில் ஒளிரும் வகையில் ஃபோக்ஸ்வாகன் லோகோ அமைக்கப்பட்டிருக்கிறது.

உட்புறம் மற்றும் வசதிகள்:

காரின் உள்ளே ரொம்பவும் மினிமலிஸ்டிக்காக இல்லாமல், அதே நேரம் போதுமான டிசைன் அம்சங்களுடன் ஒரு ஸ்மூத்தான டிசைனைக் கொடுத்துள்ளது ஃபோக்ஸ்வாகன். ஸ்போர்ட்டியான மற்றும் ஸ்டைலான ஸ்டீயரிங் வீலுக்கு அருகில் இருக்கும் வகையில் 13 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் 10 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு மூன்று லேயர்களாக, விதவிதமான வண்ணங்களில் கொடுக்கப்பட்டிருப்பது ஃப்யூச்சரிஸ்டிக்கான மற்றும் ஸ்டைலான லுக்கைக் கொடுக்கிறது.

எலெக்ட்ரிக் கார் என்பதால் அனைத்து கண்ட்ரோல்களையும் டச் அடிப்படையில் கொடுக்காமல், சில ஃபிசிக்கல் கண்ட்ரோல்களையும் ஃபோக்ஸ்வாகன் கொடுத்திருக்கிறது. குறிப்பாக ஹஸார்டு விளக்குகள், அடிப்படையிலான கிளைமேட் கண்டரோல் வசதிகள் மற்றும் டீஃபாகர் ஆகியவற்றுக்கு ஃபிசிக்கல் கண்ட்ரோல்களே கொடுக்கப்பட்டுள்ளன. செண்டர் கன்சோலில் வயர்லெஸ் சார்ஜிங் பேடு, மீடியா கண்ட்ரோல்களுக்கு ரோட்டரி நாப் ஆகியவை தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், லெதர் போன்ற சீட்கள், ரியர் வியூ கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் IRVM, 10 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், நிலையான பனோரமிக் ரூஃப் கிளாஸ், மஸாஜிங் மற்றும் மெமரி வசதியுடன் கூடிய 12 வே பவர்டு முன்பக்க சீட்கள் ஆகிய வசதிகளும் இந்த ID போலோ எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தக் கார் இந்தியாவிற்கு வருமா என்பது இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் எழும் கேள்வியாக இருக்கும். இதனை தற்போது ஐரோப்பாவிலேயே விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இந்திய எலெக்ட்ரிக் வாகன விற்பனை சந்தை இப்போது தான் தொடக்க நிலையில் இருக்கிறது. மேலும், ரூ.20 லட்சத்திற்குள்ளான விலையிலேயே எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஃபோக்ஸ்வாகன் ID போலோ மாடலானது இந்திய மதிப்பிற்கு ரூ.28 லட்சத்தை ஒட்டிய விலையில் ஐரோப்பாவில் வெளியிடப்பட உள்ளது. இதனை ப்ரீமியமான வசதிகள் கொண்ட ஒரு மாடலாக ஃபோக்ஸ்வாகன் உருவாக்கியிருக்கிறது. எனவே தற்போதைய நிலையில் இது இந்திய சந்தைக்கு சரிப்படாத ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலாகவே இருக்கும்.

இந்தியாவிற்கென தனி எலெக்ட்ரிக் வாகன திட்டத்தை ஃபோக்ஸ்வாகன் கொண்டுள்ளது. 2028-ல் இந்திய சந்தைக்கென வடிவமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடும். அதற்கு முன்னதாக ID 4 எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை ப்ரீமியமான விலையில் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யும் திட்டமும் ஃபோக்ஸ்வாகனிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Thursday, April 30, 2026, 13:51 [IST]
English summary
Volkswagen id polo electric hatchback car launched check all details here
மேலும்... #volkswagen #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+