7-சீட்டர் ஜப்பான் கார் வரலைனா என்ன... ஃபோக்ஸ்வேகன் சொன்னத செய்து காட்டிடுச்சு! விலையை கேட்டா தான் தலை சுத்துது

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் டைரோன் ஆர்-லைன் (Tayron R-Line) என்கிற அதன் புதிய எஸ்யூவி காரின் உள்ளூர் அசெம்பிள் (Assemble) பணிகளை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அதன் உற்பத்தி தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது. இந்த புதிய 7-சீட்டர் எஸ்யூவி, வருகிற மார்ச் மாதத்திற்குள் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இந்த காரை உற்பத்தி செய்ய ஃபோக்ஸ்வேகன் துவங்கியுள்ளது.

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் விலையுயர்ந்த முதன்மையான எஸ்யூவி கார் மாடலாக டிகுவான் ஆர்-லைன் (Tiguan R-Line) காருக்கு மேல் நிலைநிறுத்தப்பட உள்ள புதிய டைரோன் ஆர்-லைன் ஆனது ஏற்கனவே விற்பனையில் உள்ள 7-சீட்டர் டிகுவான் ஆர்-லைனின் நீட்டிக்கப்பட்ட பதிப்பாகும். இதில் 2.0 லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது.

volkswagen tayron r-line

இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 204 குதிரைத்திறனையும் (hp), 320 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியது ஆகும். இந்த என்ஜின் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு, அனைத்து சக்கரங்களுக்கும் ஆற்றலை அனுப்புகிறது. 5-சீட்டர் டிகுவான் ஆர்-லைன் காரை போன்று இந்த எஸ்யூவி கார் 'எம்.க்யூ.பி எவோ' (MQB EVO) பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புதிய டைரோன் ஆர்-லைன் 2,789 மிமீ நீளத்தில் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்)-ஐ பெறுகிறது. இது டிகுவான் ஆர்-லைனை விட 109 மிமீ அதிகமாகும். இந்த கூடுதல் நீளம் ஆனது காரினுள் மூன்றாவது வரிசை இருக்கைகளைச் சேர்ப்பதற்கான இடவசதியை வழங்குகிறது.

local assembly of volkswagen tayron r-line

இத்தகைய காரை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியிருப்பதை தொழிற்சாலையில் காருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஃபோக்ஸ்வேகன் உறுதிப்படுத்தி உள்ளது. டிசைனைப் பொறுத்தவரை, டைரோன் ஆர்-லைன் ஆனது டிகுவான் ஆர்-லைனைப் போலவே இருந்தாலும், தனித்துவமான லைட்டிங் அம்சங்களுடன் கூர்மையான, ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

பின்னோக்கி வளைந்த பம்பர்கள், பெரிய 19-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் பிரத்யேக ஆர்-லைன் பிராண்டிங் ஆகியவை இந்த காரின் வெளிப்புற அம்சங்களில் அடங்குகின்றன. காரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் ஒளிரும் ஃபோக்ஸ்வேகன் லோகோக்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED லைட் பார்கள் உள்ளன. காரின் உட்புறத்தில், ஓட்டுநரை நோக்கி சாய்ந்திருக்கும் 15-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்திய காலநிலைக்கு ஏற்றவாறு முன்பக்க இருக்கைகளில் காற்றோட்டம் (வென்டிலேஷன்) வசதியும், 30 வண்ணங்களில் பெறக்கூடிய கேபின் விளக்குகளும் இந்த காரில் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, 7 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், லெவல்-2 ADAS (மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள்) மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை அடங்கும். கூடுதலாக, 3-மண்டல கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டமும் இந்த எஸ்யூவி காரில் இடம்பெற வாய்ப்புள்ளது.

மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கினால், 850 லிட்டர் வரை தாராளமான பூட் ஸ்பேஸ் கிடைக்கும். புதிய ஃபோக்ஸ்வேகன் டைரோன் ஆர்-லைன் கார் ஆனது சி.கே.டி (Completely Knocked Down) முறையில் இந்தியாவுக்குக் பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு தொழிற்சாலையில் வைத்து முழு காராக அசெம்பிள் செய்யப்படுவதால், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) சற்று அதிகமாக சுமார் ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2021இல் டிகுவான் ஆல்ஸ்பேஸ் (Allspace) கார் நிறுத்தப்பட்ட பிறகு, ஃபோக்ஸ்வேகன் மீண்டும் 3 இருக்கை வரிசைகளை கொண்ட முழு அளவிலான எஸ்யூவி கார்கள் பிரிவில் இந்த மாடலுடன் நுழைகிறது. இந்திய சந்தையில், புதிய ஃபோக்ஸ்வேகன் டைரோன் ஆர்-லைன் காருக்கு ஸ்கோடா கோடியாக், ஜீப் மெரிடியன், எம்ஜி க்ளாஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் புதியதாக வரவிருக்கும் எம்ஜி மெஜெஸ்டர் போன்ற முழு-அளவு எஸ்யூவி கார்கள் போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 23, 2026, 5:00 [IST]
English summary
Volkswagen india commences local assembly of tayron r line suv car check all details here
மேலும்... #volkswagen #car assembling #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+