எலெக்ஸன் ரிசல்ட்டை விட மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய கார்! டெலிவரி தொடங்கியதால் உற்சாகம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2026 ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
Rudin Pattiam என்ற யூடியூப் (Youtube) சேனலில் இது தொடர்பான புதிய வீடியோ (Video) ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், வாடிக்கையாளர் ஒருவர் தனது குடும்பத்துடன் ஷோரூமிற்கு வந்து, ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெலிவரி (Delivery) எடுத்து செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

2026 ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

2026 ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
மறுபக்கம் இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், பிரேக் அஸிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), 2026 ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2026 ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 11 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 19.3 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுக்கு எல்லாம் 2026 ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications