மாருதியை வெடவெடத்து போக வைத்த ஜெர்மனி நிறுவனத்தின் கார் நாளை அறிமுகம்... விலை ஆச்சரியப்படுத்த போகுது...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், நாளை (ஏப்ரல் 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வசதிகளை (Features) பொறுத்தவரையில்,10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் வென்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் மற்றும் 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கொண்டிருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் (Gear Box Options), ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஏற்கனவே போட்டி கடுமையாக உள்ளது. இந்த சூழலில், ஸ்கோடா குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் டாடா சியரா (Tata Sierra) மிட்-சைஸ் எஸ்யூவி காரும் இந்த செக்மெண்ட்டில் புதிதாக நுழைந்துள்ளது.
இதன் காரணமாக இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் தற்போது போட்டி இன்னும் கடுமையானதாக மாறியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை இந்த போட்டியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி கடுமையாக உள்ளதால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஆச்சரியப்படும் வகையிலான விலையை (Price) டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு நிர்ணயம் செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.
ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்பான டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, ஸ்கோடா குஷாக், டாடா சியரா ஆகிய கார்களுடன், மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கும், விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








