மாருதியை கதிகலங்க வைத்த ஜெர்மன் நிறுவன கார்! இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா! 9ம் தேதி கச்சேரி இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இந்திய சாலைகளில் சமீப காலமாக சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி (Launch Date) தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டீசர் புகைப்படத்தை (Teaser Image) தற்போது வெளியிட்டுள்ளது. இதில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் வரும் ஏப்ரல் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான டிசைன் (Design) மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி புதிய எல்இடி ஹெட்லைட்கள், புதிய எல்இடி டெயில்லைட்கள் மற்றும் புதிய எல்இடி பகல் நேர விளக்குகள் போன்ற அம்சங்களை எல்லாம் நம்மால் எதிர்பார்க்க முடியும்.
அத்துடன் ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்கள் (Colour Options) போன்ற அம்சங்களையும், வரும் ஏப்ரல் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மசாஜ் / வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளும் (Features), ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options), ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் நம்மால் எதிர்பார்க்க முடியும். அத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் (Gear Box Options), ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டாடா சஃபாரி (Tata Sierra), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ரெனால்ட் டஸ்டர் (Renault Duster), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) ஆகிய மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கும், ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் வருகை, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை அனேகமாக வெறும் 11.50 அல்லது 12 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்பான டைகுன் ஃபேஸ்லிஃப்ட், இந்த விலையில் வந்தால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








