ரெனால்ட் டஸ்டருக்கு போட்டியாக ஃபோக்ஸ்வேகனின் 5-சீட்டர் கார்! குஷாக்கை விட எந்த அளவுக்கு சிறந்ததாக இருக்கும்?

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்ததாக அறிமுகப்படுத்த சில புதிய கார்களை தயார்படுத்தி வருகிறது. அவற்றுள் முக்கியமானது, புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) ஆகும். ஏனெனில், சமீப காலத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஃபோக்ஸ்வேகன் கார்களுள் ஒன்று டைகுன் ஆகும். இந்த நிலையில், புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுக தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் காரை விற்பனை செய்து வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே டைகுனின் விற்பனை குறைந்துக் கொண்டே வருகிறது.

volkswagen taigun facelift launch date

குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 698 டைகுன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஜனவரியிலும் 790 டைகுன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், அதற்கு முந்தைய மாதங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான டைகுன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவ்வாறு டைகுனின் விற்பனை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதை உணர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதனை ஃபேஸ்லிஃப்டிற்கு அப்கிரேட் செய்ய தயாராகி வருகிறது.

மேம்படுத்தப்பட்ட டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டதை பொது வெளியில் பலமுறை பார்த்துள்ளோம். அதன்படி, இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என நாம் எதிர்பார்த்ததை போன்று, வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

volkswagen taigun facelift launch date

புத்துணர்ச்சியான தோற்றத்தில், கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்கள், புதிய அலங்கரிப்புகளுடன் கேபின் மற்றும் புதிய கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு முன் வெளியான டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்ட படங்களில், காரின் முன்பக்கத்தில் மெல்லியதான தோற்றத்தில் எல்இடி ஹெட்லைட்களை பார்க்க முடிந்தது.

இந்த எல்இடி ஹெட்லைட்கள் இரண்டையும் கோடு போன்றதான டிஆர்எல் லைட் பார் ஒன்று இணைக்கக்கூடியதாக காட்சியளித்தது. இவற்றிற்கு மத்தியில் ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வேகன் லோகோ இடம்பெறுகிறது. இவற்றுடன், காரின் வெளிப்புறத்தில் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள் மற்றும் முன்பக்க கிரில் உள்ளிட்டவற்றின் டிசைன் மாற்றப்படுகின்றன. அத்துடன், காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்களின் வடிவமும் மாற்றப்படுகிறது.

உள்ளே, புதிய ட்ரிம் மெட்டீரியல்கள் மற்றும் அப்டேட்டான கலர் ஆப்ஷன்கள் உடன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் கேபின் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரை ஒத்ததாக இதன் கேபின் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, புதிய 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை, பெரிய 10.25 இன்ச்சில் டிரைவருக்கான திரை மற்றும் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படலாம்.

மற்றப்படி, டைகுன் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் தான் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடரப்படும் என தெரிகிறது. தற்போதைய டைகுன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.42 லட்சத்தில் இருந்து ரூ.19.18 லட்சம் வரையில் இருக்கும் நிலையில், புதிய மாடலின் விலை இதனை காட்டிலும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அப்கிரேட் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில்தான் ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) கார்கள் அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் டைகுனும் தயாராகி வருகிறது. இதன் அறிமுகம் ஏப்ரல் 9 என தகவல் வெளியாகி உள்ளதால், இப்போதே பலர் இந்த காரை வாங்க தயாராகி இருப்பர்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 26, 2026, 17:00 [IST]
English summary
Volkswagen taigun facelift launch date revealed rival to new renault duster
மேலும்... #volkswagen #taigun #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+