ஹூண்டாய், டாடா கார்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்ல! ரூ.20 லட்சத்திற்குள் கிடைப்பது பெரிய பிளஸ் பாயிண்ட்

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து புதியதாக டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியான வெளிப்புறம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட உட்புற கேபின் வசதிகள் உடன் புதிய டைகுன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் விபரங்கள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) அறிவிக்கப்பட்டு கார் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விற்பனையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கு ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் கிரெட்டா (Creta) மற்றும் டாடா சியரா (Tata Sierra) கார்கள் போட்டியாக உள்ளன. இந்த கார்களுடன் புதிய டைகுன் எந்த அளவிற்கு வேறுப்பட்டு உள்ளது என்பதை ஏற்கனவே முந்தைய தொகுப்பு ஒன்றில் பார்த்திருந்தோம். இந்த தொகுப்பில், விலையை பொறுத்தவரையில் புதிய டைகுன் ஆனது கிரெட்டா மற்றும் சியராவை விட விலைமிக்கதா அல்லது விலை குறைவானதா என்பதை பற்றி பார்க்க போகிறோம்.

volkswagen taigun facelift price comparison with hyundai creta and tata sierra

டைகுன் விலைகள்

புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரை இரு விதமான டர்போ-பெட்ரோல் (Turbo-Petrol) என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவையாவன, 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆகும். மற்றப்படி, டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. அதாவது, புதிய டைகுனை டீசல் என்ஜின் உடன் வாங்க முடியாது.

இரு என்ஜின்களில் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை மேனுவல் அல்லது டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். இதில், மேனுவல் கியர்பாக்ஸ் உடன் புதிய டைகுன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.14.59 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் உடன் இந்த காரின் விலைகள் ரூ.13.79 லட்சம் - ரூ.15.74 லட்சம் ஆகும்.

மறுப்பக்கம், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆனது ட்யூயல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.99 லட்சத்தில் இருந்து ரூ.19.29 லட்சம் வரையில் நிர்ணயிக்கபட்டுள்ளன. ரூ.20 லட்சத்திற்குள் டைகுனின் விலைகளை ஃபோக்ஸ்வேகன் நிர்ணயித்து இருப்பது அதன் வியாபார யுக்தியை காட்டுகிறது.

volkswagen taigun facelift price comparison with hyundai creta and tata sierra

ஹூண்டாய் கிரெட்டா விலைகள்

கிரெட்டா ஆனது டைகுனை போன்று அளவில் சிறியதான 1 லிட்டர் என்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆனால், இதில் ஒரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் ஆனது நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆகும். 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிரெட்டா விற்பனை செய்யப்படுகிறது.

இதில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆனது மேனுவல் மற்றும் ஐவிடி (IVT) கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் நிலையில் அதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.10 லட்சத்தில் இருந்து ரூ.17.41 லட்சம் வரையில் உள்ளன. 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆனது டிசிடி (DCT) கியர்பாக்ஸ் உடன் மட்டுமே ரூ.19.90 லட்சம் - ரூ.20.05 லட்சம் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் ரூ.12.40 லட்சம் - ரூ.20.05 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா சியரா விலைகள்

கிரெட்டாவை போன்று சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட சியராவும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் ரூ.11.49 லட்சம் - ரூ.17.99 லட்சம் விலைகளில் விற்கப்படுகிறது.

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆனது டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.17.99 லட்சம் - ரூ.20.99 லட்சம் வரையில் உள்ளன. மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடனான சியராவின் விலைகள் ரூ.12.99 லட்சம் - ரூ.21.29 லட்சம் வரையில் ஆகும்.

Car Model Base Price (Approx.) Top Spec Price (Approx.)
ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் ₹10.99 Lakh ₹19.29 Lakh
ஹூண்டாய் கிரெட்டா ₹10.79 Lakh ₹20.20 Lakh
டாடா சியரா ₹11.49 Lakh ₹21.29 Lakh

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், கிரெட்டா மற்றும் சியராவின் சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.20 லட்சத்தை தாண்டி செல்லும் நிலையில், டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரை ரூ.20 லட்சத்திற்குள் அறிமுகம் செய்திருப்பது உண்மையில் ஃபோக்ஸ்வேகனின் சிறந்த வியாபார யுக்தியை காட்டுகிறது. அதேபோல், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் எதையும் வழங்காமல், இரு பெட்ரோல் என்ஜின்களையும் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களாக வழங்கியிருப்பது வாடிக்கையாளர்களை ஈர்க்கும். இருப்பினும், டீசல் என்ஜின் உடன் கிரெட்டா அல்லது சியரா கார்களுள் ஒன்றை தான் வாங்க முடியும் என்பது புதிய டைகுனுக்கு சற்று பாதகமாக அமையலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2026, 11:19 [IST]
English summary
Volkswagen taigun facelift price comparison with hyundai creta and tata sierra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+