டாடா சியராவை ஆரம்பத்திலேயே முடிச்சிவிட வந்துள்ள புதிய ஃபோக்ஸ்வேகன் கார்! விலையை சீக்கிரமா சொல்லுங்கப்பா...

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் அதன் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) காரை இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அளவில் சிறியதான காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக காரான டைகுன் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

வெளிப்புற தோற்றம்: ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் முக்கியமான மாற்றங்கள் காரின் முன் மற்றும் பின்பக்கங்களில் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிய டைகுனின் முன்பக்கம் ஆனது புதிய ஃபோக்ஸ்வேகன் டைரோன் ஆர்-லைன் (Tayron R-Line) காரின் முன்பக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இருப்பதை பார்க்கும்போதே தெளிவாக தெரிகிறது.

volkswagen taigun facelift unveil

புதிய டைகுனின் முன்பக்கத்தில் ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வேகன் லோகோ, லைட் பார் மூலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், மெல்லியதான கிரில் மற்றும் புதிய டிசைனிலான பம்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில், புதிய பம்பரில் செங்குத்தான ஸ்லாட்கள் உடன் க்ரோம் டீடெயிலிங் இடம்பெற்றுள்ளது. புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஜிடி வேரியண்ட்டில் கிரில், அலாய் சக்கரங்கள் மற்றும் ஜிடி பேட்ஜ் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் கிடைக்கும்.

மற்றப்படி, புதிய டைகுனின் பக்கவாட்டில் பெரியதாக எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. ஒரே மாற்றம் என்னவென்றால், 17-இன்ச் அலாய் சக்கரங்கள் புதிய டிசைனில் உள்ளன. காரின் பின்பக்கத்திலும் ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வேகன் லோகோ, சதுர வடிவிலான டர்ன் இண்டிகேட்டர்களுடன் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் முன்பக்கத்தை போல புதிய டிசைனிலான பம்பர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

volkswagen taigun facelift unveil

தொழிற்நுட்ப அம்சங்கள்: 2026 டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு உள்ளே கேபின் முழுவதுமாக இரு நிறங்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறங்களை காரின் வேரியண்ட்டை பொறுத்து 6 விதமான கலர் ஆப்ஷன்களில் தேர்வு செய்யலாம். டாஷ்போர்டின் லே-அவுட் முன்பை போல் அப்படியே தொடரப்பட்டாலும், சில புதிய ஃபினிஷ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

டாஷ்போர்டில் 10.25 இன்ச்சில் டிரைவருக்கான புதிய டிஸ்பிளே மற்றும் 10.1 இன்ச்சில் அப்டேட்டான இன்ஃபோடெயின்மென்ட் திரை உள்ளிட்டவற்றை புதியதாக டைகுன் பெற்றுள்ளது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆனது ஏஐ மூலம் செயல்படக்கூடிய அப்டேட்டான சாஃப்ட்வேரை பெற்றுள்ளது. இதன் மூலமாக ரியல்-டைமில் விபரங்களை பெறுவதுடன், குரல் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் திரையை கட்டுப்படுத்தலாம்.

இவற்றுடன், புதிய பனோராமிக் சன்ரூஃப் -ஐயும் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி, கேபினை சுற்றிலும் வண்ண விளக்குகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் புதிய கம்பிரெஸர் உடன் அப்டேட்டான ஏசி சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் பெற்றுள்ளது.

பயணிகள் மற்றும் காரின் பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், குழந்தைகளுக்கான இருக்கைகளை பொருத்துவதற்கு ISOFIX மவுண்ட்கள் மற்றும் தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய காரின் பின்புறத்தை காட்டும் உட்புற கண்ணாடி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

என்ஜின் சிஸ்டம்: புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் மிக முக்கியமான அப்டேட்டாக 1 லிட்டர் TSI என்ஜின் உடன் புதிய 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய பழைய டைகுன் காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றப்படி, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் அறிமுகத்தால் டைகுனின் 1 லிட்டர் TSI என்ஜினின் எரிபொருள் திறன் 5.8% அதிகரித்துள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. இது இல்லாமல், 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கிடைக்கும். ஆனால், இந்த ஆற்றல்மிக்க என்ஜினை 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடியும்.

இந்த 1.5 லிட்டர் என்ஜின் வேரியண்ட்களில் தற்போது பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி, டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்த இரு என்ஜின்களின் பவர் அவுட்-புட்டில் எந்த மாற்றமும் இல்லை. டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு 4 வருடங்கள்/ 1 லட்சம் கிமீ உத்தரவாதம், 4 வருடங்களுக்கான அவசரகால உதவி மற்றும் மூன்று சர்வீஸ்களுக்கான பணியாளர்கள் கட்டணம் இலவசம் உள்ளிட்டவற்றை ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் முக்கியமான அப்கிரேட் என்று பார்த்தால், அது 1 லிட்டர் என்ஜின் உடன் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது ஆகும். அதேபோல், காரின் வெளிப்புற தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களிலும் அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2026 டைகுனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.11.50 லட்சத்தில் இருந்து ரூ.18 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2026, 13:55 [IST]
English summary
Volkswagen taigun facelift unveiled in india check design features expected price all details here
மேலும்... #volkswagen #taigun #india #suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+