மாருதி, டாடாவுக்கே சவால் விடும் எஸ்யூவி கார்.. ரொம்ப ரொம்ப கம்மி விலையில் வெளியானது!

மேம்படுத்தப்பட்ட டைகூன் ஃபேஸ்லிப்ட் (Taigun Facelift) மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஃபோக்ஸ்வாகன்.கடந்த வாரம் தான் இந்த மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது வெளியிட்டுள்ளது. ரூ.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்த மிட்-சைஸ் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது ஃபோக்ஸ்வாகன்.

புதிய மாடலை கம்ஃபர்ட்லைன், ஹைலைன், ஹைலைன் பிளஸ், ஜிடி லைன், டாப்லைன், ஜிடி பிளஸ் குரோம் மற்றும் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் என ஏழு வேரியன்ட்களாக வெளியிட்டிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இரண்டு விதமான இன்ஜின் தேர்வுகள் மற்றும் மூன்று விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொண்டிருக்கிறது இந்தக் கார்.

Volkswagen Taigun

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேரியன்ட் மற்றும் பவர்ட்ரெயின் வாரியாக புதிய ஃபோக்ஸ்வாகன் டைகூன் எஸ்யூவி மாடலின் விலையை இங்கே பார்க்கலாம்.

அடிப்படையான கம்ஃபர்ட்லைன் (Comfortline) வேரியன்டானது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. இந்த வேரியன்டே ரூ.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கிறது. ஹைலைன் (Highline) வேரியன்டானது 1.0 லிட்டர் இன்ஜினுடன் மேனுவல் (ரூ.12.70 லட்சம்) மற்றும் ஆட்டோமேட்டிக் (ரூ.13.80 லட்சம்) என இரண்டு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளையும் கொண்டிருக்கிறது.

Volkswagen taigun full

ஹைலைனைப் போலவே ஹைலைன் பிளஸ் (Highline Plus), ஜிடி லைன் (GT Line) மற்றும் டாப்லைன் (Topline) ஆகிய வேரியன்ட்களும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளைப் பெற்றிருக்கின்றன. ஹைலைன் பிளஸ் மேனுவல் மாடலானது ரூ.14.30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் மாடலானது ரூ.15.45 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஜிடி லைன் வேரியன்டின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்களானது முறையே ரூ.14.60 லட்சம் மற்றும் ரூ.15.75 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளைக் கொண்டிருக்கின்றன. டாப்லைனின் ட்ரிம்களானது ரூ.16 லட்சம் (மேனுவல்) மற்றும் ரூ.17.18 லட்சம் (ஆட்டோமேட்டிக்) என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளைக் கொண்டுள்ளன.

ஜிடி பிளஸ் குரோம் (GT Plus Chrome) மற்றும் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் (GT Plus Sport) ஆகிய இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வேரியன்ட்களிலும் இந்த ஒரு இன்ஜின் தேர்வு மட்டும் தான். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படவில்லை.

7 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஜிடி பிளஸ் குரோம் வேரியன்டானது ரூ.19 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வேரியன்டானது ரூ.19.30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டுள்ளன. இந்தியாவில் கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ரெனோ டஸ்டர், டாடா சியரா, ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட், மாருதி விக்டோரில், டொயோட்டா ஹைரைடர் மற்றும் மாருதி கிராண்டு விட்டாரா ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாக இந்த ஃபோக்ஸ்வாகன் டைகூன் விற்பனை செய்யப்படவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா குஷாக், புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ரெனோ டஸ்டர் மற்றும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய கார் மாடல்களை விட சற்று கூடுதலான தொடக்க விலையைக் கொண்டுள்ளது புதிய ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஃபேஸ்லிப்ட் எஸ்யூவி மாடல். எனினும் அடிப்படையில் இருந்தே டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும் எஸ்யூவியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 14, 2026, 16:51 [IST]
English summary
Volkswagen taigun launched in india at rs 11 lakh check all details here
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+