5 பேர் மிகவும் சௌகரியமாக செல்வதற்கு ஃபோக்ஸ்வேகன் உருவாக்கிய கார்! ஒரே மாதத்தில் விற்பனை 70% அதிகரிப்பு!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கார்கள் விற்பனையில் கவனிக்கத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதற்கு ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், டைகுன் கார்களின் விற்பனை ஆனது கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும் சுமார் 70% அதிகரித்துள்ளது. இது எப்படி சாத்தியமானது, டைகுன் காரின் சிறப்பம்சங்கள் என்ன என்கிற கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார், டைகுன் ஆகும். ஃபோக்ஸ்வேகனின் எஸ்யூவி வகையை சேர்ந்த காராக விளங்கும் டைகுன், இந்தியாவில் ஓரளவிற்கு சிறப்பாக விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கார் மாடலாகும். இது கடந்த ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த மாதத்தில் வழக்கத்தை விடவும் டைகுன் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

volkswagen taigun suv car sales

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்த டைகுன் கார்களின் எண்ணிக்கை 1,543 யூனிட்கள் ஆகும். அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டில் இதே ஏப்ரல் மாதத்தில் 1,155 டைகுன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, டைகுன் கார்கள் விற்பனை ஆனது 34% அதிகரித்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் 488 டைகுன் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதைவிட நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கடந்த 2026 மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் டைகுன் கார்கள் விற்பனை சுமார் 70% அதிகரித்து இருப்பதாகும். ஏனெனில், கடந்த மார்ச் மாதத்தில் பெரும்பாலான கார் மாடல்கள் அதிகமாக விற்பனையாகி இருந்தன.

volkswagen taigun suv car sales

அவற்றில் பெரும்பாலானவற்றின் விற்பனை அதற்கடுத்த கடந்த ஏப்ரல் மாதத்தில் சற்று குறைந்துள்ளது. ஆனால், டைகுன் கார்கள் மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் அதிகமாக விற்பனையாகி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மார்ச் மாதத்தில் 908 டைகுன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், ஏப்ரலில் அதனை காட்டிலும் சுமார் 635 யூனிட் டைகுன் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பியன் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட எஸ்யூவி காரான ஃபோக்ஸ்வேகன் டைகுன் இந்தியாவில் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, 1 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் என இரு விதமான டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

மற்றப்படி, டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் எதிலிலும் டைகுன் விற்பனை செய்யப்படுவது இல்லை. சிறிய அளவிலான 1 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம்.

பவர்ஃபுல்லான 1.5 லிட்டர் TSI என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 250 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இது 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. இந்த கியர்பாக்ஸ் உடன் ஆக்டிவ் சிலிண்டர் டெக்னாலஜி வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே எஸ்யூவி கார்களுக்கு மார்க்கெட் மிகவும் பெரியதாகி உள்ளது. இதில் பலனடைந்த கார்களுள் ஃபோக்ஸ்வேகன் டைகுனும் ஒன்று. இருப்பினும் ஒரே மாதத்தில் விற்பனை சுமார் 70% அதிகரித்து இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. வரும் மாதங்களிலும் இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கிறோம்.

Article Published On: Thursday, May 14, 2026, 9:41 [IST]
English summary
Volkswagen taigun suv car sales 70 percent growth in april 2026 check all detail here
மேலும்... #volkswagen #taigun #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+