ஃபோக்ஸ்வாகனின் நல்ல இடவசதி கொண்ட புதிய எஸ்யூவி இந்தியாவில் வெளியானது
இந்தாண்டு தொடக்கத்தில் தான் இந்தியாவில் புதிய 'டேரான் R-லைன்' (Tayron R-Line) ப்ரீமியம் எஸ்யூவியை வெளியிட்டது ஃபோக்ஸ்வாகன். தற்போது அதனை விட சற்று விலை குறைவான டேரான் லைஃப் (Tayron Life) வெர்ஷனை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். டேரானின் சொகுசு அம்சங்கள் கொண்ட ஒரு எஸ்யூவி சற்று குறைவான விலையில் வேண்டும் என்பவர்கள் டேரான் லைஃபை தேர்வை செய்யலாம்.
ஃபோக்ஸ்வாகன் டேரான் R-லைன் எஸ்யூவியானது 46.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் நிலையில், புதிய டேரான் லைஃப் மாடலானது அதனை விட 5 லட்சம் ரூபாய் வரை குறைவாக 41.99 லட்சம் ரூபாய் வரை குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியுள்ளது.

இந்த 5 லட்சம் ரூபாய் விலைக்குறைப்புடன், R-லைன் மாடலில் இருந்து சில அம்சங்களும் புதிய லைஃப் மாடலில் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்தவுடன் நாம் தெரிந்து கொள்வது வெளிப்புற டிசைன் தான். அடிப்படையில் R-லைன் மற்றும் லைஃப் இரண்டும் ஒரே டிசைன் கொண்ட எஸ்யூவிக்கள் தான் என்றாலும், R-லைனை விட சிம்பிளான தோற்றம் கொண்ட எஸ்யூவியாகவே டேரான் லைஃப் காட்சியளிக்கிறது.
குறிப்பாக பம்பர்கள், கிரில் ஆகியவை சிம்பிளான டிசைனைக் கொண்டிருப்பதோடு, R-லைன் பேட்ஜ் மற்றும் பிற ஸ்போர்ட்டியான டிசைன் எலமென்ட்கள் எதுவும் இந்தப் புதிய லைஃப் வெர்ஷனில் இல்லை. மேலும், அலாய் வீலும் கூட புதிய சிம்பிளான டிசைனைக் கொண்டிருப்பதோடு, R-லைனில் இருப்பதை விட சற்று சிறியதாகவும் இருக்கிறது.

காரின் உட்புறமும் சில வசதிகளை குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. R-லைனில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே, 2.0 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் புதிய டேரான் லைஃப் எஸ்யூவியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 204 hp பவர் மற்றும் 320 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும் இந்த இன்ஜினானது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆல் வீல் டிரைவ் வசதியும் R-லைனைப் போலவே கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய டேரான் லைஃப் மாடலில் குறிப்பிடத்தக்க முக்கியமான மாற்றம் ஒன்று என்னவென்றால், இது ஒரு 5 சீட்டர் எஸ்யூவி தான். டேரான் R-லைனின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று அது 7 சீட்டர் ப்ரீமியம் எஸ்யூவி என்பது. அதனை மாற்றி டேரான் லைஃப் வெர்ஷனை 5 சீட்டராக வெளியிட்டுள்ளது ஃபோக்ஸ்வாகன்.
R-லைனின் பெரும்பான்மையான வசதிகளை டேரான் லைஃப் வெர்ஷனுக்குக் கடத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். குறிப்பாக லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள், பனோரமிக் சன்ரூஃப், 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் ஆகிய வசதிகளைக் கூறலாம். ஒட்டுமொத்தத்தில் பார்ப்பதற்கு சிம்பிளான ஆனால் ப்ரீமியமான ஒரு 5 சீட்டர் எஸ்யூவியாக வெளியாகியுள்ளது ஃபோக்ஸ்வாகன் டேரான் லைஃப்.
டேரான் R-லைன் மாடலானது மூன்று வரிசை சீட்களுடன் 345 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டிருக்கிறது. புதிய டேரான் லைஃப் மாடலில் மூன்றாம் வரிசை இருக்கைகள் இல்லாத காரணத்தினால் 885 லிட்டர் வரையிலான பூட் ஸ்பைஸே இந்தப் புதிய எஸ்யூவியில் நாம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கோடா கோடியாக்கின் லாஞ் என்ற 5 சீட்டர் வேரியன்டிற்கு இணையாக இந்த ஃபோக்ஸ்வாகன் டேரான் லைஃபைக் கூறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டேரான் R-லைன் மற்றும் டேரான் லைஃப் ஆகிய இரண்டு வேரியன்ட்களுக்கும் இடையே குறிப்பிட்ட அளவு வேறுபாட்டைக் காட்டுவதற்காகக் கூட 7 சீட்களுக்குப் பதிலாக 5 சீட்களை ஃபோக்ஸ்வாகன் கொடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் டேரானின் ஒரு வேரியன்டே மற்றொரு வேரியன்டிற்கு போட்டியாக வருவதையும் ஃபோக்ஸ்வாகன் தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications