ஃபார்ச்சூனர் சாம்ராஜ்யத்திற்கு நாளையோட முடிவு கட்ட போறாங்க! டொயோட்டா தலையில் அடுத்தடுத்து இடி விழுகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் (Volkswagen Tayron R-Line) கார், நாளை (பிப்ரவரி 19) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரின் அறிமுக நிகழ்ச்சி நாளை மதியம் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full Size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மூன்று வரிசைகளை கொண்ட இந்த காரில், 7 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அவசியம் ஏற்பட்டால், இந்த காரின் 2வது மற்றும் 3வது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் அதிக லக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும்.

Volkswagen Tayron R-Line

ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரில், பனரோமிக் சன்ரூஃப், 30 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 15 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம், ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரில் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் முன் பகுதியில் மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. டிசைனை (Design) பொறுத்தவரையில், 19 இன்ச் அலாய் வீல்கள், முழுமையான எல்இடி லைட்கள் மற்றும் இலுமினேட்டட் லோகோ போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும்.

Toyota Fortuner

செயல்திறனை பொறுத்தவரையில், ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரில், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். இதன் பவர் அவுட்புட் 204 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் ஆகும். அத்துடன் ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பத்தையும், ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் கொண்டிருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டேரான் ஆர்-லைன் காருக்கு பிறகு, மேலும் 5 புதிய கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) கார்களின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்களும் அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரின் விலை 48-55 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், இந்த காரின் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரின் வருகை, இந்திய சந்தையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq), எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) மற்றும் எம்ஜி மெஜஸ்ட்டர் (MG Majestor) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில், எம்ஜி மெஜஸ்டர் கார், வரும் ஏப்ரல் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்தான் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. ஆனால் ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் மற்றும் எம்ஜி மெஜஸ்டர் என அடுத்தடுத்து 2 புதிய கார்களின் வருகையால், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் முழுமையான ஆதிக்கத்திற்கு நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 18, 2026, 17:59 [IST]
English summary
Volkswagen tayron r line suv india launch tomorrow expected price safety features design engine
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+