தர லோக்கலா எறங்கீட்டாங்க! மாருதி காரை விட குறைவான விலையில் ஜெர்மன் கம்பெனியின் கார்! இந்தியாவே ஸ்டண் ஆயிருச்சு
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா (Skoda) நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. இது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் (Volkswagen Group) ஒரு அங்கமாக இயங்கி கொண்டுள்ளது. அதாவது ஃபோக்ஸ்வேகன் குழுமம்தான், ஸ்கோடா நிறுவனத்தின் தாய் நிறுவனம் (Parent Company) ஆகும்.
இதன் காரணமாக ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய 2 நிறுவனங்களின் கார்களுக்கு இடையே நிறைய ஒற்றுமைகளை பார்க்க முடியும். ப்ளாட்பார்ம், வசதிகள் (Features) மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) ஆகியவற்றை 2 நிறுவனங்களும் பரிமாறி கொள்கின்றன. ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) உடன்பிறப்புகள் இதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

இந்த வரிசையில் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) காரின் அடிப்படையில் புத்தம் புதிய கார் ஒன்றை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆட்டோ கார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா நிறுவனத்தின் விலை குறைவான கார் என்ற பெருமையை கைலக்தான் வைத்துள்ளது. ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 7.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ஸ்கோடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

கிட்டத்தட்ட இதே விலையில்தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார் என்ற பெருமையை இது பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு நேரடி போட்டியாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய கார் இருக்கும். அதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே 8.26 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஆனால் இதை விட குறைவான விலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஸ்கோடா கைலக் கார் உருவாக்கப்பட்டுள்ள அதே MQB-AO-IN பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காரும் உருவாக்கப்படவுள்ளது. அதேபோல் ஸ்கோடா கைலக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஸ்கோடா கைலக் காரில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு அதிநவீன மற்றும் பாதுகாப்பு வசதிகளையும் நாம் அப்படியே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காரிலும் எதிர்பார்க்கலாம். ஆனால் ஸ்கோடா கைலக் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காரின் வெளிப்புற மற்றும் உட்புற டிசைனில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் ஒரு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய கார் ஏற்றதாக இருக்கும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய கார், வரும் 2027ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த புதிய காரின் வருகை, இந்திய சந்தையில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மட்டுமல்லாது, ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3X0) போன்ற காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்களுக்கும் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








